திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் கொடுத்த 5 ஹிட் படங்கள்.. ஜோவையே காதலில் உருக வைத்த மேடி

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர்தான் நடிகர் மாதவன். அதிலும் அதிக அளவு ரொமான்டிக் படங்களில் நடித்ததன் மூலம் பெண் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராகவே இருந்து வந்தார். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அப்படியாக இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த ஐந்து ஹிட் படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

அலைபாயுதே: மணிரத்தினம் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அலைபாயுதே. இதில் மாதவன் உடன் ஷாலினி, சொர்ணமால்யா, ஜெயசுதா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் ஆனது மிக அழகான காதலை மையமாக வைத்து வெளியான திரைப்படமாகும். அதிலும் இப்படத்தில் கார்த்திக் என்னும் கேரக்டரில் மாதவன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: அதிக சம்பளத்தை கேட்ட மாதவன்.. முடியாது என மறுத்த தயாரிப்பாளரை அசிங்கப்படுத்திய கொடுமை!

கன்னத்தில் முத்தமிட்டால்: மணிரத்தினம் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். இதில் மாதவன் உடன் சிம்ரன், நந்திதா தாஸ், பி எஸ் கீர்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். மேலும் இப்படம் ஆனது ஒரு தாயை பிரிந்த குழந்தையின் ஏக்கத்தை மாதவன் ஒரு தந்தையாக இருந்து பூர்த்தி செய்வதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது.

ஆயுத எழுத்து: மாதவன் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயுத எழுத்து. இப்படத்தை மணிரத்தினம் இயக்கி தயாரித்து இருந்தார். இதில் மாதவன் உடன் சூர்யா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், திரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் ஆனது முக்கோண கதைகளை மையமாக வைத்து வெளியான திரைப்படம் ஆகும். அதிலும் மாதவன் முரட்டுத்தனமான அடிதடி குணம் கொண்டவராக இன்பசேகர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.

Also Read: முரட்டுத்தனமாய் மாறிய 5 சாக்லேட் ஹீரோக்கள்.. மாதவனை கொடூரனாய் மாற்றிய மணிரத்தினம்

டும் டும் டும்: அழகம்பெருமாள் இயக்கத்தில் மணிரத்தினம் தயாரிப்பில் 2001 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் டும் டும் டும். இதில் மாதவன் உடன் ஜோதிகா, விவேக், மணிவண்ணன், கல்பனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் ஆதி என்னும் ரோலில் மாதவன் தனது அல்டிமேட் ஆன நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் ஜோதிகாவையே தனது காதலால் உருக வைத்திருப்பார் என்றே சொல்லலாம்.

குரு: அபிஷேக் பச்சன் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குரு. இதில் அபிஷேக் பச்சன் உடன் ஐஸ்வர்யா ராய், மாதவன், வித்யா பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் ஷியாம் சரவணன் என்னும் ரோலில் மாதவன் அமிதாபச்சனின் நண்பனாக தனது அல்டிமேட் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: மாதவனுக்காக உருவாக்கிய கதை.. அஜித் நடித்ததால் படுதோல்வி, புலம்பி தவிக்கும் இயக்குனர்

Trending News