வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹிட் இயக்குனருடன் கூட்டணி போடும் மாதவன்.. 12 வருடத்திற்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் சாக்லேட் பாய்

திரையுலகில் நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகர் மாதவன் தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து அசத்தி கொண்டிருக்கின்றார். அதிலும் இப்போது 12 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ஹிட் இயக்குனரின் படத்தில் நடிப்பதன் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்,

அப்போது முதல் இப்போது வரை ரசிகைகளை சாக்லேட் பாயாக இருக்கும் மாதவன் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக கமிட் ஆகி உள்ளார். இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மித்ரன் ஆர் ஜவகர் 2008ல் தனுஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

Also Read: பாதி கிணறுக்கு மேல் திணறும் கேப்டன் மில்லர்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் இயக்குனர்

அதன் பிறகு தொடர்ந்து தனுஷின் குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களையும் இயக்கினார். அதன் பின் சமீபத்தில் வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் நீண்ட நாள் கழித்து மித்ரன் ஆர் ஜவகர் கொடுத்த தரமான ஹிட் படம். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பின் இவருக்கு மார்க்கெட் உயரவே இப்பொழுது ரொமான்டிக் ஹீரோ மாதவனுக்கு கதை சொல்லி ஓகே பண்ணி இருக்கிறாராம். ஏற்கனவே இவர் எடுத்த படம் ஒன்று ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் அரியவன். அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். அந்த படத்தை பற்றி கவலைப்படாமல் இப்பொழுது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார். மீண்டும் சாக்லேட் பாய் மாதவனை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வருகிறார்.

Also Read: 5 வயசுல தான் அண்ணன் தம்பி, அப்புறம் பங்காளி.. ஒரே நாளில் மோதிக் கொள்ளும் தனுஷ், செல்வராகவன்

மித்ரன் ஆர் ஜவகர்- மாதவன் இணையும் படத்தை வீடியோ ஒன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே சாக்லேட் பாய் மாதவனின் மின்னலே, தம்பி போன்ற இரண்டு படங்களையும் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாதவன் கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

அவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா என்ற தமிழ் படத்தில் தான் நடித்தார். அதன் பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்த மாதவன் இப்போது ஹிட் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹருடன் கூட்டு சேர்ந்து புதிய படத்தில் நடிக்க முடிவெடுத்து இருப்பது ரசிகர்களை குதூகலபடுத்தி உள்ளது. எனவே நீண்ட நாட்கள் கழித்து மாதவனை தமிழ் படத்தில் பார்ப்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: 3-வது முறையாக இணையும் கூட்டணி.. அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட தனுஷ் பட இயக்குனர்

Trending News