புதன்கிழமை, ஜனவரி 15, 2025

20 வருடங்களுக்குப் பிறகு இணைந்த மாதவன், சிம்ரன் ஜோடி.. இணையத்தில் ட்ரெண்டாகும் செல்ஃபி புகைப்படம்

மாதவன் இயக்கம் மற்றும் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது ராக்கெட்ரி. விஞ்ஞானி நம்பி நாராயணன் பயோபிக் படமான இப்படத்தில் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக மாதவன் ராக்கெட்ரி படத்தை பற்றிய பேச்சுதான்.

இந்நிலையில் தற்போது சிம்ரன் சமூகவலைத்தள பக்கத்தில் மாதவனுடன் திரைப்பயணத்தை பகிர்ந்த அதைப்பற்றி ஒரு புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது ராக்கெட்ரி படத்திற்கு முன்னதாக பார்த்தால் பரவசம் மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இவர்களுடைய ஜோடி பலராலும் கவரப்பட்டது. மேலும் அந்த படம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிம்ரன் மற்றும் மாதவன் இருவரும் ராக்கெட்ரி திரைப்படத்தின் மூலம் திரையில் ஒன்றாக இணைந்துள்ளனர்.

இந்நிலையில் மாதவனுடன் இணைந்து ஒரு போட்டோவை எடுத்து அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு பார்த்தால் பரவசம் படத்தில் சிமி, டாக்டர் மாதவன் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இந்திரா, திரு தற்போது ராக்கெட்ரி படத்தில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நம்பி நாராயணன் நடிக்கும் வரை பெரிதாக எதுவும் மாறவில்லை.

மேலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுடன் திரையில் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. அதுவும் மாதவன் இயக்குனராக அறிமுகமான படத்தில் பணியாற்றுவது மிகவும் அருமையாக இருந்தது, நீங்கள்தான் சிறந்தவர் மேடி மாதவன் என சிம்ரன் பதிவிட்டிருந்தார்.

Madhavan-Simran

மேலும் தற்போது சிம்ரன் பதிவிட்டுள்ள அந்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் படத்திலும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நம்பியாக சிம்ரன் மற்றும் மாதவனின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Trending News