வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாதவனுக்கு ஆப்பு வைத்த அப்பாஸ்.. கர்மா செய்த தரமான சம்பவம்

தமிழில் இரண்டு சாக்லேட் கதாநாயகர்களாக 90களில் அறிமுகம் ஆனவர்கள் அப்பாஸ் மற்றும் மாதவன். அப்பாஸ் குஷ்புவின் உறவினர் என்ற காரணத்தால் திரைத்துறையில் எளிதாக நுழைந்தார். பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மறுபுறம் மாதவன் தொலைக்காட்சி தொடர்களில் காமெடி வேடம் ஏற்று நடித்து முன்னேறி வெள்ளித்திரைக்கு வந்தார். அவருக்கும் பெண் விசிறிகள் ஏராளம்.

இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்து ஒன்றிரண்டு படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அதிலும் இருவரும் சேர்ந்து நடித்த மின்னலே மிகப்பெரிய ஹிட். இன்று வரை அசைக்க முடியாத காதல் படங்களில் ஒன்றாக விளங்குகிறது. திரை மறைவில் அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த ஈகோ பற்றி இங்கே பார்க்கலாம்.

Also Read: அப்பாஸ் தவறவிட்ட சூப்பர் ஹிட் படம்.. மேனேஜரின் சூழ்ச்சியால் விஜய்க்கு அடித்த லக்

அப்பாஸுக்கு ஆரம்பத்தில் இருந்தே மாதவன் மீது ஓர் பொறாமை இருந்திருக்கிறது. இவர்கள் இருவரும் முதன் முதலில் ‘ரிலாக்ஸ்’ என்னும் கன்னட மற்றும் தமிழ் படத்தில் கதாநாயகர்களாக நடித்தார்கள். அந்த படத்தில் இருவருக்கும் சமமான வகையில் தான் பாத்திரங்கள் இருந்தது. அப்பாஸ் தலையிட்டு மாதவனின் பங்கை குறைத்தார். மேலும் மாதவனை காமெடி ஹீரோவாக தான் நடிக்க சிபாரிசு செய்தார்.

காரணம் இந்த படங்கள் வருவதற்கு முன்னரே அப்பாஸ் காதலர் தினம், பூச்சூடவா, ஜாலி போன்ற படங்களில் நடித்து ஓரளவுக்கு பெரிய நடிகராக இருந்தார்.
மாதவன் நிலைமை கொஞ்சம் மோசமாக இருந்த நேரம் அது. அலைபாயுதே வெற்றி பெற்றபோதும் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

Also Read: ஹிட் இயக்குனருடன் கூட்டணி போடும் மாதவன்.. 12 வருடத்திற்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் சாக்லேட் பாய்

அப்போது தான் அறிமுக இயக்குனர் கவுதம் மேனன் மின்னலே படத்தில் மாதவனை ஒப்பந்தம் செய்தார். அந்த படத்தில் ஓர் துணை நாயகன் வேடம் இருந்தது. அதற்கு மாதவன் நண்பர் என்னும் முறையில் அப்பாஸை சிபாரிசு செய்தார். படம் வெளிவந்து மிகப்பெரிய ஹிட். ஆனால் படத்தில் அப்பாஸுடைய ரோல் என்னமோ சிறியது தான்.

கிட்டத்தட்ட ஒரு கெஸ்ட் ரோல் போல. இதனால் கடுப்பாகி விட்டார் அப்பாஸ் பின்னாளில் காபி வித் அனு நிகழ்ச்சியில் பங்கு பெறும்போது மின்னலே படத்தின் இயக்குனர் தன்னை வைத்து பல காட்சிகளை எடுத்ததாகவும், பின்னர் மாதவன் அதை நீக்க சொல்லியதாகவும் கூறினார். எது எப்படியோ அப்பாஸை விட மாதவன் பெரிய நடிகராக இருக்கிறார். கர்மா தனது வேலையை சரியாகச் செய்துள்ளது.

Also Read: சதுரங்க வேட்டை பாணியில் 5000 கோடி சுருட்டிய மோசடி கும்பல்.. பணத்தாசையால் சிக்கிய மாதவன், சூரி

Trending News