திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

Digital India: தேர்வு எழுதிய அத்தனை பேரும் பெயில்.. டிஜிட்டல் இந்தியாவில் கேட்பாரற்று போன கல்வி

Madhya Pradesh School shocking result: கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், ஆகாசம் ஏறி வைகுண்டம் போனானாம், என்று ஒரு பழமொழி இருக்குது. அது இப்போ நம்ம நாடு இருக்கிற நிலைமை என்ன சரியான பொருத்தமாக இருக்கும். இந்தியாவில் மக்களவை தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஆளும் கட்சி மீண்டும் மோடி தான் பிரதமராக வரவேண்டும் என்பதற்கு முக்கிய காரணமாக சொல்லுவது டிஜிட்டல் இந்தியா. அதாவது வேட்பாளர் ஒருவர் ஏதாவது ஒரு சின்ன தெருவில் இருக்கும் கடையில் பஜ்ஜி போண்டா வாங்கி சாப்பிடுவதும், அப்புறம் ஆன்லைன் பேமெண்ட் பண்ணுவதும், அதை சுற்றி நாலு மீடியாக்கள் வீடியோ எடுப்பது மாதிரி இருக்கிறது.

இதுதான் மோடியின் சாதனை, இதுதான் டிஜிட்டல் இந்தியா என மாறு தட்டிக் கொள்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா இருக்கட்டும், இந்தியாவில் கல்வி நிலைமை எப்படி இருக்கிறது என்று யாராவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா.

தென்னிந்தியாவை பொறுத்த வரைக்கும் கல்வி நிலையில் எந்த ஒரு குறையும் சொல்லிவிட முடியாது. இதை நாம் உலகம் எங்கும் பெருமையாக கூட சொல்லிக் கொள்ளலாம். ஆனால் வட இந்தியாவின் கல்வி நிலைமை என்பது ரொம்பவும் மோசமான நிலைமையில் தான் இருக்கிறது.

தேர்வில் காப்பியடிப்பது, ஏற்கனவே வினாத்தாளை லீக் செய்து விடுவது, பரீட்சைக்கு வராமல் விடுவது என அவர்கள் செய்யும் ராஜதந்திரங்கள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்கும் விதமாகத்தான் இருக்கிறது.

ஒரு அரசு பள்ளியில் கணித ஆசிரியை இல்லை, உடனே அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா, பொருளாதார ஆசிரியரை கணக்கு பாடம் எடுக்க வைத்திருக்கிறார்கள். இந்த அவலம் ஏற்பட்டு இருப்பது மத்திய பிரதேசத்தின் ஒரு அரசு பள்ளியில்.

அது மட்டுமா 75 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி அதில் 5 மாணவர்கள் மட்டுமே பாஸ் ஆகி இருக்கிறார்கள். மற்றொரு பள்ளியில் பாதிக்குப் பாதி மாணவர்கள் பரீட்சைக்கே வரவில்லை. மத்திய பிரதேசத்தின் உட்புற கிராமம் பர்னூரில் தேர்வு எழுதிய 85, 12ஆம் வகுப்பு மாணவர்களுமே தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.

பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் கல்வி நிலைமை இப்படி இருக்கிறது என இந்த தேர்வு ரிசல்ட் தேர்தல் பிரச்சாரமாக எதிர்க்கட்சியினர் எடுத்து விட்டார்கள். இந்த ரிசல்ட்டை காட்டி ஓட்டு வாங்கினாலும் வாங்கிவிடுவார்கள் இருக்கட்டும்.

அந்த 85 மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி யாராவது யோசித்துப் பார்ப்பார்களா என்றால் அது சந்தேகம்தான். இன்னும் இது போன்ற எந்தெந்த மாநிலங்களில் கல்வி கிடைக்காமல் எத்தனை மாணவர்களின் வாழ்க்கை?யாகி இருக்கிறதோ என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

Trending News