வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஆனந்தி, அன்பு காதலுக்கு ஆப்பு வைக்கும் மகேஷ்.. இந்த வாரம் சிங்கப்பெண்ணே சீரியலில் காத்திருக்கும் டிவிஸ்ட்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் மிகப்பெரிய திருப்பம் இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக நந்தா கேரக்டரை வைத்து அரச்ச மாவையை அரைத்துக் கொண்டிருந்தார்கள். இதிலிருந்து இப்போது வெளிவந்து மகேசை வைத்து ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்த இருக்கிறார்கள்.

என்னதான் நந்தா போலி அழகனாக ஆனந்தியை ஏமாற்றி இருந்தாலும், உண்மையான அழகன் யார் என தெரிந்து கொள்ள இன்னும் ஆனந்திக்கு ஏக்கம் இருக்கிறது. அதே நேரத்தில் அன்பு தானாக ஆனந்தியிடம் நான்தான் அழகன் என்று சொல்ல வேண்டாம் என நினைக்கிறான்.

ஆனந்தி, அன்பு காதலுக்கு ஆப்பு வைக்கும் மகேஷ்

இதனால் அவளுடைய அப்பா அம்மாவை சென்னைக்கு வர வைத்து அவர்கள் மூலமாக ஆனந்தியிடம் பேச அன்பு திட்டமிடுகிறான்.அன்பு திட்டத்திற்கு ஏற்ற மாதிரி ஆனந்தியின் குடும்பமும் அவளை பார்ப்பதற்காக சென்னைக்கு வருகிறார்கள்.

ஆனால் அன்புவை முந்திக்கொண்டு மகேஷ் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற காத்திருக்கிறான். ஆனந்தியின் பிறந்த நாளில் அவள் மீதான தன்னுடைய காதலை தெரியப்படுத்த மகேஷ் திட்டம் போடுகிறான்.

இதற்காக அன்பு விடமே மகேஷ் உதவி கேட்பதுதான் இந்த வார எபிசோடில் ஹைலைட்டாக இருக்கப் போகிறது. அன்பு விடம் மகேஷ் தன்னுடைய காதலை ஆனந்தியிடம் எப்படியாவது நீ தெரியப்படுத்த வேண்டும் என உதவி கேட்கிறான்.

அதே நேரத்தில் சென்னைக்கு வரும் ஆனந்தியின் அப்பா அம்மாவையும் மகேஷ் முதலில் சந்திப்பது போல் காட்டப்படுகிறது. ஒரு வேலை மகேஷ் மீது நல்ல எண்ணம் ஏற்பட்டு ஆனந்தியின் அப்பா அம்மா மகேஷை திருமணம் செய்து கொள்ள ஆனந்தியிடம் சொன்னால் அவளின் முடிவு என்னவாக இருக்கும் என்பதுதான் இப்போதைய பரபரப்பான கேள்வியாக இருக்கிறது.

சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்

Trending News