வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

புருஷனுக்கு போட்ட மந்திரம் பாண்டியனுக்கு எதிராக மாறும் வாரிசு.. கதிர் ராஜியின் காதலுக்கு தூது போகும் மீனா

Pandian Stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன், கதிரை அடித்ததால் அண்ணன் தம்பிகள் சமாதானப்படுத்தும் விதமாக கதிரிடம் ஜாலியாக பேசிக்கொண்டு அனைவரும் மொட்டை மாடியில் தூங்கி விடுகிறார்கள். சரவணன் வருவார் என்று எதிர்பார்ப்புடன் தங்கமயில் ரூமில் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நேரமாகியும் வராததால் தங்கமயில் மாடியில் போய் பார்க்கிறார்.

அங்கே சரவணன் தம்பிகளுடன் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்த தங்கமயில், சரவணனை எழுப்புகிறார். ஆனால் சரவணன் அசந்து தூங்கியதால் தங்கமயில் ஏமாற்றுத்துடன் கீழே போய் புலம்பிக்கொள்கிறார். அத்துடன் அம்மாவிற்கு ஃபோன் பண்ணி பேசலாம் என்று பாக்கியத்திற்கு கால் பண்ணுகிறார். ஆனால் பாக்கியம் எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று போனை கட் பண்ணி விடுகிறார்.

அம்மாவுடன் சேர்ந்து பிளான் போட்ட தங்கமயில்

இதனால் அழுது கொண்டே தங்கமயில் தூங்கி விடுகிறார். பிறகு கோமதி காலையில் எழுந்து வந்து பார்த்தால் தங்கமயில் எழுந்திருக்கவில்லை. எந்த வேலையும் பார்க்கவில்லை என்று அடுப்பங்கரையில் வேலை பார்க்க ஆரம்பிக்கிறார். அப்பொழுது ராஜி மற்றும் மீனா எழுந்து ஒரே நேரத்தில் கிச்சனுக்கு வருகிறார்கள். நீங்கள் என்ன இருவரும் சேர்ந்து வருகிறீர்கள் என்று கோமதி கேட்கிறார்.

அதற்கு ராஜி, மீனாவும் நாங்கள் இருவரும் ஒன்றா தான் ஒரே ரூமில் தூங்கணும் என்று சொல்லிய நிலையில் மாடியில் அண்ணன் தம்பிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கோமதியிடம் சொல்கிறார். உடனே கோமதி, அப்படி என்றால் தங்கமயில் ஏன் இன்னும் எழுந்திருக்கவில்லை என்று ரூமில் போய் பார்க்கிறார். தங்கமயில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கோமதி எழுப்பி என்னாச்சு உடம்பு ஏதும் சரியில்லையா என்று கேட்கிறார்.

அதற்கு தங்கமயில் அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை, கொஞ்சம் சோர்வாக இருக்கிறது அதனால் தூக்கமாக வருகிறது என்று சொல்கிறார். உடனே கோமதி சரி நீ தூங்கி ரெஸ்ட் எடு என்று சொல்லி போய் விடுகிறார். பிறகு சரவணன் கீழே வந்து வந்ததும் தங்கமயில் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து எழுப்புகிறார். ஆனால் தங்கமயில், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி எப்படியாவது சரவணன் மாமாவை இனி இந்த மாதிரி மாடியில் போய் படுக்காத படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பிளான் பண்ணினார்.

அதன்படி தங்கமயில், இரவு நீங்கள் இல்லை என்பதால் சரியாக தூங்கவில்லை. அதனால் தூக்கமாக வருகிறது என்று பேச்சு ஆரம்பிக்கும் பொழுது சரவணன் அப்படி என்றால் நீ படுத்து தூங்கு. நான் வெளியில் போய் இருக்கிறேன் என்று கிளம்பி விடுகிறார். இதை பார்த்ததும் சரவணன் மீது கோபப்படுகிறார். அந்த நேரத்தில் பாக்கியம் கால் பண்ணி தங்கமயிலிடம் பேசும் பொழுது இதற்கெல்லாம் ஒரே தீர்வு நீ மாப்பிள்ளை கூட்டிட்டு ஹனிமூன் போயிட்டு வா எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார்.

அதனால் தங்கமயில், சரவணனுக்கு தூபம் போட்டு எப்படியாவது ஹனிமூனுக்கு கூட்டிட்டு போக வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். அதன்படி தங்கமயில் ஆசையை நிறைவேற்றுவதற்காக பாண்டியனிடம் வாக்குவாதத்தில் சரவணன் ஈடுபட்டு பொண்டாட்டி ஆசையை நிறைவேற்றப் போகிறார். இதற்கு இடையில் ராஜி மீனா ஒன்றாக தூங்கும் பொழுது ராஜி, கதிரை பற்றி பேசிய நிலையில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று மீனா புரிந்து கொள்கிறார்.

அதன்படி இவர்கள் காதல் ஒன்று சேர வேண்டும். இவர்கள் மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மீனா அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் பொறுப்பாக தூது போகப் போகிறார். இதனைத் தொடர்ந்து கதிர் மற்றும் ராஜியின் காட்சிகள் அதிகமாக காட்டப்பட்டால் இன்னும் இந்த நாடகம் சுறுசுறுப்பாக போகும்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News