ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஓடிடியில் கலக்கி வரும் விக்ரமின் மகான்.. வேற லெவலில் சிறப்பாக கொண்டாடிய படக்குழு

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மகான். இப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தியேட்டரில் வெளியாகும் என்று கருதப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் சில நாட்களுக்கு முன் வெளியானது.

படம் ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று கலக்கி வருகிறது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர் நேரடியாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு போன் போட்டு படத்தை பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இப்படி பலருடைய பாராட்டும் மகான் திரைப்படத்திற்கு கிடைத்து வருவதால் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் பொருட்டு படக்குழுவினர் ஒரு பெரிய சக்சஸ் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளனர். இதில் படத்தில் நடித்த அத்தனை பேரும் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த புகைப்படங்களை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமான கேக்கை அனைவரும் ஒன்று சேர்ந்து வெட்டுவது போல் இருக்கும் அந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இடையில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்த விக்ரமுக்கு இந்த மகான் திரைப்படம் சிறந்த வெற்றி படமாக அமைந்துள்ளது. இதை தொடர்ந்து அவரின் நடிப்பில் கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

Trending News