சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை மகாலட்சுமி. சன் மியூசிக்கில் ஆங்கராக பணியாற்றிய இவர் சீரியல்களின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அந்த வகையில் ராதிகாவின் வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.
இவர் இல்லாத ராதிகாவின் சீரியல்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு இவர் ராடான் தயாரிப்பில் ஏராளமான தொடர்களில் நடித்திருக்கிறார். பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் அனில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.
Also read : 2ம் திருமணத்திற்கு நாள் குறிக்க துடிக்கும் ராதிகா.. வெறியான பாக்யா!
ஆனால் சில வருடங்களிலேயே மகாலட்சுமி தன் கணவருடன் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர் சீரியல் நடிகர் ஈஸ்வருடன் தொடர்பில் இருந்ததாக பரபரப்பு செய்திகள் வெளியானது.
ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ இது குறித்து சோசியல் மீடியாவில் பல கருத்துக்களை வெளியிட்டார். ஆனால் மகாலட்சுமி இந்த விஷயம் உண்மை இல்லை என்று மீடியாவில் தெளிவுபடுத்தினார். அதன் பிறகு இந்த சர்ச்சை ஒரு வழியாக ஓய்ந்து போனது.
Also read : காதல் மனைவியை கரம் பிடித்த விஜய் டிவி புகழ்.. காட்டுத் தீயாய் பரவும் திருமண புகைப்படங்கள்
இந்நிலையில் மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் சந்திரசேகரை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் நளனும் நந்தினியும் உள்ளிட்ட சில திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கும் இவர் சில வருடங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி சர்ச்சையில் சிக்கிவரும் இவர் மற்றொரு சர்ச்சை நாயகியை கரம்பிடித்து இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களின் திருமண புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது. இதை பார்த்த பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .மேலும் மகாலட்சுமி நல்ல புளியங்கொம்பாய் பிடித்து விட்டார் என்ற கருத்துக்களும் தற்போது வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
Also read : வருஷம் ஆக ஆக வயது குறையும் குஷ்புவின் புகைப்படம்.. ஏர்போர்ட்டில் அசந்து பார்த்த ஏரோஸ்டர்ஸ்