திங்கட்கிழமை, மார்ச் 3, 2025

மகாநதி சீரியலின் இயக்குனர் பிரவினின் புத்தம் புது சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள், பாரதிக்கு கிடைக்கும் வாய்ப்பு

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியல் தான் தற்போது ஃபேவரிட் சீரியலாக மக்கள் மனதை வென்றிருக்கிறது. ஆனால் டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்கும் ஆசை சீரியல் அதிகப் புள்ளிகளை பெற்றிருந்தாலும் மக்கள் மனதை கொள்ளை அடித்த ஒரே சீரியல் என்றால் மகாநதி தான். அதுவும் விஜய் மற்றும் காவிரி கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் அடிமையாகி விட்டார்கள் என்பதற்கு ஏற்ற மாதிரி இரண்டு பேரையும் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் எல்லா பெருமையும் மகாநதி சீரியலின் இயக்குனர் பிரவீனுக்கு தான் வந்து சேரும் என்பதற்கு ஏற்ப சமீபத்தில் முடிந்த 500 ஆவது எபிசோடு வெற்றி விழாவில் மொத்த டீமும் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் கொடுத்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்த ஒரு தகவல் வெளிவந்திருப்பது என்னவென்றால் மகாநதி சீரியலை எடுத்து வரும் இயக்குனர் பிரவீன் இன்னொரு புத்தம்புது சீரியலை இயக்குவதற்கு தயாராகி விட்டார்.

அதாவது பிரவீனை பொறுத்தவரை ஒரே சமயத்தில் இரண்டு சீரியல்களை எடுத்து வெற்றியைக் கொடுப்பவர். அந்த வகையில் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா போன்ற இரண்டு சீரியல்களையும் கொடுத்து நல்ல வரவேற்பை பெற்றார். அதே மாதிரி மகாநதி சீரியலை எடுக்க ஆரம்பித்து வெற்றியைப் பார்த்ததும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலை எடுத்தார்.

ஆனால் அந்த சீரியல் மொத்தமாக டேமேஜ் ஆகிவிட்டது என்பதற்கு ஏற்ப பல குளறுபடிகள் நடந்து விட்டது. முக்கியமாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்த திரவியம் கேரக்டரை டேமேஜ் பண்ணியதால் அந்த சீரியலை அவசர அவசரமாக முடித்து விட்டார்கள். அதனால் தற்போது வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலுக்கு பதிலாக பிரவீன் இன்னொரு சீரியலை எடுக்க தயாராகிவிட்டார்.

இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோவாக பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கேரக்டரில் நடித்த அருண் நடிக்க போவதாக தகவல் வெளியாயிருக்கிறது. ஏற்கனவே மகாநதி சீரியல் மூலம் பிரவீன் பிரபலமான நிலையில் அடுத்து ஒரு காதல் கல்யாண கதையை கொண்டு வரப் போகிறார். அதே நேரத்தில் மகாநதி சீரியலை முடித்து விடுவார்களோ என்று சில ரசிகர்கள் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் வந்திருக்கும் தகவலின் படி மகாநதி சீரியல் கிட்டத்தட்ட 2000 எபிசோடு வரை போவதாகவும் அதை இப்போதைக்கு முடிப்பதற்கு வாய்ப்பில்லை என்பதும் வெளியாகி இருக்கிறது. அத்துடன் மகாநதி சீரியலை தயாரிக்கும் குளோபல் வில்லேஜஸ் தான் பிரவீன் எடுக்க போகும் புது சீரியலையும் தயாரிக்க போகிறது.

Trending News