வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

500 நாட்களை தாண்டிய மகாநதி சீரியல்.. ஆர்வக்கோளாறு காவிரியை வெறுப்பேற்றி பார்க்கும் விஜய்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியல் தான் மக்களின் பேவரட் என்று சொல்லும் அளவிற்கு விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் விஜய் மற்றும் காவிரியின் காதல் மற்றும் சுட்டித்தனமான சண்டைகள் இருப்பதால் பார்ப்பவர்களின் மனதை கவர்ந்து விட்டது.

ஆனால் இதில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தும் விதமாக வெண்ணிலா தற்போது விஜய் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜய் மற்றும் காவிரிக்குள் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்று ராகினியும் பல சதிகளை செய்து வருகிறார்.

அதற்கேற்ற மாதிரி விஜய்யும், ஆர்வக்கோளாறாக இருக்கும் காவிரியை வெறுப்பேற்றி பார்க்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை வைத்து வெண்ணிலா மூலம் சீண்டிப் பார்க்கிறார். காவிரி இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் விஜய் மற்றும் காவிரி மனதில் காதல் இருப்பதால் இவர்களை யாராலும் பிரிக்க முடியாது என்ற நம்பிக்கையில் நாடகம் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று மகாநதி சீரியல் தொடங்கி கிட்டதட்ட 500 நாட்களை வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது.

ஆனால் இதை முன்னிட்டு வெளிவந்த புரோமோவை பார்த்த மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு விஜய், வெண்ணிலாவை பற்றி காவிரியிடம் புராணம் பாடி வருகிறார். வெண்ணிலா எப்படிப்பட்டவர், அவங்க குடும்பத்தில் மகாராணி மாதிரி இளவரசியாக துள்ளித் திரிந்தார்.

அவளுடைய இந்த நிலைமைக்கு நானும் காரணம் என்று ஓவராக வெண்ணிலாவை பற்றி பேசி காவிரி மனசை நோகடித்ததோடு பார்ப்பவர்களையும் நோகடிக்கும் வகையில் விஜய் மது அருந்திவிட்டு காவேரி இடம் புலம்பி தவிக்கிறார். பாவம் எதுவுமே புரியாமல் காவிரியும் பயத்தில் இருக்கிறார்.

Trending News