சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட சோக கதை.. விஜய் படத்தை நம்பி அதல பாதாளத்தில் விழுந்த மகேஷ் பாபு

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் மகேஷ் பாபு. இவர் தெலுங்கில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். பொதுவாகவே இவரை பார்ப்பதற்கு இவர் செய்யும் செய்கை எல்லாமே விஜய் செய்தது போலவே இருக்கும். அதனாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அத்துடன் இவர்கள் இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்கள். மேலும் இவர்கள் படத்தையே மாற்றி மாற்றி ரீமேக் செய்து நடித்துக் கொள்வார்கள். அதாவது தெலுங்கில் இவர் நடித்த ஹிட்டான படத்தை தமிழில் விஜய் நடிப்பதும், இவர் இங்கு நடித்து ஹிட்டான படத்தை மகேஷ் பாபு அங்கே ரீமேக் செய்து நடிப்பதும் வழக்கமாகவே இருந்து வருகிறது.

Also read: படுப்பதற்கு முன் இதை செய்யுங்கள் மகேஷ் பாபு.. அன்பு கட்டளையிட்ட கீர்த்தி சுரேஷ்!

இதற்கிடையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தை முதலில் மகேஷ் பாபு வைத்து தான் தெலுங்கில் எடுக்கப்படுவதற்காக எல்லா வேலைகளும் நடந்தது. ஆனால் அப்பொழுது அந்த படத்தின் ரைட்சை வாங்கிய அனைவரும் விஜய்க்கு இங்க நல்ல மாஸ் இருக்கிறது. அவரை வைத்து எடுத்தால் இந்த படம் ஹிட் ஆகிவிடும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதனால் மகேஷ்பாபுவிடம் இந்த படத்தை நான் விஜய்யை வைத்து தமிழில் எடுக்கிறேன். உங்களுக்காக நான் வேற கதையை ரெடி பண்ணி கொண்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட மகேஷ் பாபு ஓகே, விஜய் என் நண்பர் தான் நான் அவருக்காக இதை விட்டுக் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இப்படித்தான் ஏ.ஆர். முருகதாஸ், மகேஷ் பாபுவை துப்பாக்கி படத்தில் இருந்து கழட்டி விட்டிருக்கிறார்.

Also read: இணை பிரியாமல் இருந்த 4 நண்பர்கள்.. சென்னையை விட்டு கண்ணீருடன் கிளம்பிய மகேஷ் பாபு

பின்பு அவர் சொன்ன மாதிரி ஐந்து வருடங்கள் கழித்து ஒரு கதையை ரெடி பண்ணி மகேஷ்பாபு க்கு கொடுத்த கதை தான் ஸ்பைடர். இந்த படம் சரியாக ஓடாமல் மகேஷ் பாபுக்கு பெரிய அடியாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவின் கேரியர் அதல பாதாளத்திற்கு சென்றது என்றே சொல்லலாம். விஜய்க்காக இவர் செஞ்ச தியாகம் கடைசியில் இவருக்கே வினையாக அமைந்துவிட்டது.

அதன் பிறகு இன்றுவரை ஏஆர் முருகதாஸ் உடன் மகேஷ் பாபு எந்த படத்தில் இணையவில்லை. இவர் மட்டுமில்லை ஏஆர் முருகதாஸும் இந்த படத்திற்கு பிறகு தெலுங்கில் வேறு எந்த படங்களும் இயக்கவில்லை. இவர்களைப் பார்க்கும் பொழுது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.

Also read: அப்பாஸ், மணிவண்ணனுடன் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்.. அதுவும் எந்த படம் தெரியுமா?

- Advertisement -spot_img

Trending News