Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்திக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அந்த இடத்தில் எப்போதுமே அன்பு தான் ஆஜராவான்.
ஆனால் இந்த முறை ஆனந்தி இவ்வளவு பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கும் பொழுது மகேஷ் களத்தில் இறங்கி இருக்கிறான்.
மகேஷ் ஆதரவில் தஞ்சம் அடையும் ஆனந்தி
ஆனந்தியின் கர்ப்பத்திற்கு அன்பு தான் காரணமென மகேஷ் தவறாக புரிந்து கொள்கிறான். ஆனந்தியை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்து ஹாஸ்டலில் விடுகிறான்.
மித்ரா இது பற்றி மகிழ்ச்சிடா கேட்கும் பொழுது எனக்கு ஆனந்தியின் சந்தோஷம் தான் முக்கியம் என சொல்கிறான். அதே நேரத்தில் அன்புவை நேரில் அழைத்து நடந்ததை சொல்வது போலவும் காட்டப்படுகிறது.
மேலும் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு அன்பு தான் காரணம் என மகேஷ் அவன் மீது குற்றம் சுமத்துவது போலவும் காட்டப்படுகிறது.
ஒரு வேளை அன்பு இதை மறுத்து அதை மகேஷ் நம்பும் பட்சத்தில் இருவரும் இணைந்து ஆனந்தியின் இந்த நிலைக்கு யார் காரணம் என கண்டுபிடிப்பது அடுத்த கட்ட எபிசோடுகளாக வர வாய்ப்பு இருக்கிறது.