Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் கடைசியில் பயங்கரமான ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். மித்ரா மற்றும் கருணாகரன் திட்டப்படி அன்பு மற்றும் ஆனந்தியை அரவிந்த் குடோனுக்குள் வைத்து பூட்டி விடுகிறான்.
அது மட்டுமில்லாமல் செக்யூரிட்டியின் கண்ணில் மண்ணை தூவி அன்பு மற்றும் ஆனந்தி கம்பெனியை விட்டு வெளியே போகிவிட்டதாக ஒரு டிராமாவையும் நடத்திவிட்டார்கள். இரவு நேரம் அதிகமாகி விட்டதால் ஹாஸ்டல் வார்டன் நேரடியாக மகேஷுக்கு போன் பண்ணி ஆனந்தி இன்னும் ஹாஸ்டலுக்கு வராததை தெரிவிப்பதோடு உடனே மகேஷ் செய்யும் ஹாஸ்டலுக்கு வர சொல்கிறார்.
அன்பு மற்றும் ஆனந்தி ரெண்டு பேருமே மிஸ் ஆனதை மகேஷ் தெரிந்து கொள்கிறான். உண்மை என்னவென்று தெரியாததால் அவனுடைய எண்ணம் பலவாராக செல்கிறது. இரவு முழுக்க பித்து பிடித்தது போல் ஆனந்தியை தேடி காரில் சுற்றுகிறான்.
எப்படியோ ஜன்னல் வழியாக ஒரு நூலை வெளியே தொங்கவிடும் அன்பு தொடர்ந்து தங்களை காப்பாற்றும்படி கத்திக் கொண்டே இருக்கிறான். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கம்பெனி வாட்ச்மேன் அன்பு மற்றும் ஆனந்தி உள்ளே இருப்பதை பார்த்து விடுவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
மகேஷ் கம்பெனிக்கு வந்து இருவரும் உள்ளே பூட்டப்பட்டு இருப்பதை நேரடியாக பார்க்காத வரை கண்டிப்பாக அன்பு என்ன சொன்னாலும் நம்ப மாட்டான். அன்பு ஆனந்தி குடோனுக்குள் சிக்கி இருக்கும்போதே மகேஷ் கம்பெனிக்கு வந்தால்தான் எந்த சிக்கலும் இருக்காது. இல்லை என்றால் மித்ரா நினைத்தபடி அவளுடைய பிளான் சக்ஸஸ் ஆகிவிடும்.
- குடோனுக்குள் மாட்டிக்கொண்ட அன்பு ஆனந்தி
- மித்ரா, கருணாகரன் செய்த கூட்டு சதி
- தேரை இழுத்து தெருவில் விட்ட ஆனந்தி