வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிங்கப்பெண்ணில் அன்புவின் வீடு தேடி வந்த மகேஷ், ஆனந்தி.. மொத்தமாய் மண்ணை வாரி போட்டு கொண்ட மித்ரா

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. காயத்ரிக்கு உதவி செய்ய போய் ஆனந்தி மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டாள் . காயத்ரிக்கு ஏற்பட்ட சிக்கலை வார்டனிடம் சொல்லி இருந்தால் கண்டிப்பாக இந்த விஷயம் இவ்வளவு தூரம் வந்திருக்காது.

காயத்ரியை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் நேற்று ஹாஸ்டலில் எல்லோரும் முன்னாடியும் அசிங்கப்பட்டு நின்னது தான் மிச்சம். ஒரு வேளை வார்டனுக்கு என்ன பிரச்சனை என தெரிந்து விட்டதா, இல்லை தெரியாமல் தான் ஆனந்தியை ஹாஸ்டலை விட்டு வெளியே அனுப்புகிறாரா என இன்னும் தெரியவில்லை.

மித்ரா அன்புக்கு போன் போட்டு ஆனந்தியை அவனுடன் அனுப்பி வையுங்கள் என சொல்கிறாள். ஆனால் வார்டன் ஆனந்தி மகேஷ் கம்பெனியில் வேலை செய்கிறாள், அந்த கம்பெனி தான் அவளுக்கு வாடகை கொடுக்கிறது எனவே மகேஷுக்கு தான் நான் போன் பண்ணுவேன் என சொல்கிறார்.

அன்புவின் வீடு தேடி வந்த மகேஷ், ஆனந்தி

இந்த விஷயத்திலேயே மித்ரா ரொம்பவும் ஆடிப் போய்விட்டாள். ஃபோன் போனதும் மகேஷ் ஒரே ஓட்டமாக ஹாஸ்டல் வந்து சேர்கிறான். மகேஷ் வந்த பிறகாது ஆனந்தி என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லி இருக்கலாம்.

ஆனால் கடைசிவரை அவள் வாயை திறக்கவே இல்லை. மகேஷும் இந்த ஒரு நைட்டு மட்டும் ஹாஸ்டல்ல இருக்கட்டும் நாளைக்கு நான் வேற இடத்துல கொண்டு போய் விடுகிறேன் என சொல்கிறான். ஆனால் வார்டன் அதை காது கொடுத்து கேட்பதா இல்லை.

இதனால் கோபப்பட்ட மகேஷ் ஆனந்தியை அவனுடைய வீட்டிற்கு கூட்டிட்டு போகிறான். ஏற்கனவே மகேஷின் அப்பா மற்றும் அம்மாவுக்கு ஆனந்தி மீது நல்ல எண்ணம் கிடையாது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷின் அம்மா பிடிவாதமாக ஆனந்தி இந்த வீட்டுக்குள் இருக்கக் கூடாது என சொல்கிறார்.

அதையும் மீறி ஆனந்தியை தங்க வைத்தால் நான் வீட்டை விட்டு வெளியே போய் விடுவேன் என்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மகேஷ் அன்புவின் வீட்டுக்கு ஆனந்தியை கூட்டிக்கொண்டு போகிறான்.

மகேஷின் அம்மாவுக்கு மேலே ஆனந்தி மீது கோபமாக இருப்பது அன்புவின் அம்மா தான். ஆனந்தியையும், மகேஷையும் அந்த நேரத்தில் வீட்டு வாசலில் பார்த்த அன்பு ரொம்பவே அதிர்ச்சியாகி போகிறான். ஒரு வேளை மகேஷின் பேச்சை கேட்டு அன்பு அந்த ஒரு இரவு ஆனந்தியை அவனுடைய வீட்டில் தங்க வைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் காயத்ரி எனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கும் ஆனந்தி ஹாஸ்டலை விட்டு வெளியே போனதுக்கும் நீதான் காரணம் என மித்ராவிடம் கோபப்படுகிறாள். காயத்ரி வார்டனிடம் என்ன நடந்தது என சொல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் ஆனந்தி மீண்டும் ஹாஸ்டலுக்கு திரும்புகிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News