புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

சிங்கப்பெண்ணில் நேருக்கு நேர் மோதும் மகேஷ், மித்ரா.. போனஸ் பிரச்சனையில் சீறி எழும் ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மித்ரா என்னதான் மகேஷிடம் பக்குவமாக நடந்து கொண்டாலும் மறைமுகமாக அவள் ஆனந்தி எதிராக காய் நகர்த்துவது அவளுக்கே திருப்பி அடித்து விடுகிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் இன்றும் சீரியலில் நடைபெற இருக்கிறது. நேற்றைய எபிசோடில் அன்புவின் தங்கச்சி யாழினி இடம் அன்பு மற்றும் ஆனந்த் இருவரும் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்கள். யாழினியை தனியாக அழைத்துக் கொண்டு போன அன்பு மற்றும் ஆனந்தி என்ன நடந்தது என்ற பிரச்சனையை அவளுக்கு தெளிவாக சொல்கிறார்கள்.

உடனே யாழினியும் இந்த விஷயத்தில் நான் கண்டிப்பாக உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன் என உறுதி அளிக்கிறாள். அதே நேரத்தில் மகேஷ் வீட்டுக்கு போன மித்ராவிடம் மகேஷ் அம்மா, நடந்த சம்பவத்தை பற்றி சொல்கிறார்.

நேருக்கு நேர் மோதும் மகேஷ், மித்ரா

மேலும் மகேஷ் மற்றும் ஆனந்தியின் நடுவில் என்னதான் நடக்கிறது என மித்ராவிடம் கேட்கிறார். அதற்கு மித்ரா மகேஷ் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிப்பதாக நான் உங்களிடம் சொல்லி இருந்தேனே, அது ஆனந்தி தான் என்று சொல்கிறாள்.

இது மகேஷின் அம்மாவுக்கு பெரிய கோபத்தை வரவழைக்கிறது. என் கம்பெனியில் வேலைக்காரியாக இருக்கும் ஆனந்தியை மகேஷ் காதலிப்பது கேட்டால் எனக்கு ரொம்பவும் அருவருப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்.

இதை கேட்டு சந்தோஷத்துடன் மித்ரா நீங்கள் இந்த விஷயம் தெரிந்த படி காட்டிக் கொள்ளாதீர்கள். மகேஷ் இப்போது ஆனந்தியை அன்புவின் வீட்டில் தங்க வைத்திருக்கிறான். அதை சாதகமாக பயன்படுத்தி ஒரு பிரச்சனையை பண்ண இருக்கிறேன்.

அப்போது மட்டும் எனக்கு சப்போர்ட் பண்ணுங்கள் என சொல்கிறாள். உடனே மகேஷின் அம்மாவும் அதற்கு சம்மதிக்கிறார். கம்பெனிக்கு வந்த ஆனந்திக்கு எதிர்பாராத இன்னொரு அதிர்ச்சியும் காத்திருக்கிறது. அதாவது எப்போதுமே கம்பெனியில் தீபாவளிக்கு ஒரு மாச சம்பளத்தை போனசாக கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்த முறை அதை பற்றி பேசி எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். கருணாகரனும் போனஸ் பணத்தோடு சம்பவ இடத்திற்கு வருகிறார். ஆனந்தி போனஸ் வாங்க வரும் பொழுது ஒரு வேலை செய்ய துப்பு கிடையாது போனஸ் வாங்க மட்டும் வந்தது என மூஞ்சில அடித்தது போல் பேசுகிறார்.

ஆனந்திக்கு முன்னாடியே போனஸ் வாங்கிய ஜெயந்தி வந்து இது என்ன போனஸ் பணம் கம்மியாக இருக்கிறது, வெறும் ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது என கேட்கிறாள். ஜெயந்தி அப்படி கேட்பதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய ப்ரோமோவில் போனஸ் பணம் கம்மியானதுக்கு காரணமாக ஆனந்தியை சொல்கிறார். கருணாகரன் அப்போது ஆனந்தி இந்த கம்பெனியில் எப்போ லாபம் அதிகமாக வருகிறதோ அப்போ நான் போனஸ் வாங்கிக்கிறேன் என சவால் விடுகிறாள்.

அதே நேரத்தில் அந்த இடத்திற்கு மகேஷ் வருகிறான். மகேசை பார்த்ததும் மித்ரா நீ இங்க என்ன பண்ற உனக்கு வேலை இருக்குன்னு சொன்னேன் இல்ல அப்படின்னு கேட்கிறார். உடனே மகேஷ் எனக்கு அதைவிட முக்கியமான வேலை இங்கே இருக்கிறது என்று சொல்கிறான்.

மகேஷ் கண்டிப்பாக போனஸ் பற்றி பேசி முழு சம்பளத்தையும் வாங்கி கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஆனந்தி இந்த வருட தீபாவளியை அன்புவின் வீட்டில் கொண்டாட இருப்பது தான் இப்போது சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News