வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிங்கப்பெண்ணில் அன்புக்கு எதிராக காய் நகர்த்திய மித்ரா.. ஆனந்தி மீதான அதீத காதலால் மிருகமாகும் மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. கடந்த வார தொடக்கத்தில் அன்பு வீட்டில் ஆனந்தி இருப்பதை அவனுடைய அம்மா கண்டுபிடித்து விடுவாரா என்ற கோணத்தில் சென்றது.

வார இறுதியில் ஆனந்தி அழகனை கண்டுபிடித்து விடுவாரா என்ற பரபரப்பில் சென்றது. கடைசி வரை அழகனை ஆனந்தி கண்டுபிடிக்க போகிறாள் என்ற நம்பிக்கையை கொடுத்துவிட்டு கடைசியாக மொத்தமாய் சொதப்பிவிட்டார் இயக்குனர்.

அன்புக்கு எதிராக காய் நகர்த்திய மித்ரா

இந்த வாரம் வெளியாகி இருக்கும் புரோமோவை பார்த்தால் ஆனந்திக்கு முன்னாடியே அழகன் யார் என மகேஷ் கண்டுபிடித்து விடுவான் போல. தெரிந்தோ, தெரியாமலோ அன்பு தான் அழகன் என்று மகேஷ் நம்புவதற்காக மித்ரா ஒரு திட்டத்தை போட்டாள்.

உண்மையிலேயே அன்புதான் அழகன் என தெரிந்து கொள்ளும்போது மகேஷ் எந்த மாதிரியான ரியாக்ஷன் கொடுப்பான் என கணிக்கவே முடியவில்லை. அழகன் எழுதிய கடிதத்தை வைத்து இது யாருடைய கையெழுத்து என கண்டுபிடிக்கலாம் என ஐடியா கொடுக்கிறாள் மித்ரா.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மித்ராவின் ஐடியாவை கேட்டு கம்பெனியில் இருக்கும் அத்தனை பேரையும் ஏதோ ஒரு கடிதத்தை எழுதி ஒரு கண்ணாடி பாக்ஸில் போட வைக்கிறான் மகேஷ். அந்த கடிதம் மொத்தத்தையும் கொண்டு வந்து அழகன் எழுதிய கடிதத்தோடு இருவரும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.

எந்த கையெழுத்தும் பொருந்தாததால் மகேஷ் ரொம்ப விரக்தி அடைகிறான். அந்த நேரத்தில் மித்ரா நம்ம எல்லோருடைய கையெழுத்தையும் இன்னும் சோதித்துப் பார்க்கவில்லை. அன்பும் இந்த கம்பெனியில் தானே வேலை செய்தான் அவனுடைய கையெழுத்தை சோதித்துப் பார்க்கலாம் என மித்ரா ஐடியா கொடுக்கிறாள்.

மித்ராவின் இந்த ஐடியாவுக்கு மகேஷ் சரி என்று சொல்கிறானா இல்லை அன்பு மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லி அதை தவிர்க்கிறானா என இந்த வார எபிசோடில் பார்க்கலாம்.

Trending News