வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிங்கப்பெண்ணில் கையும் களவுமாக சிக்கிய அன்பு, ஆனந்தி.. ருத்ரதாண்டவம் ஆடிய மகேஷ்

Singapenne: சிங்கப்பெண்ணே சீரியல் ரசிகர்களுக்கு இந்த வாரம் முழுக்க பரபரப்பான எபிசோடுகள் காத்திருக்கிறது. ஆனந்தி எப்படியும் பரம்பரை நிலத்தை மீட்டு விடுவாள் என்பது நமக்கு தெரியும். அவளுக்கு அந்த பணத்தை கொடுத்து உதவ போவது அன்புவா இல்லை மகேசா என்பது தான் எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கிறது.

அன்புவை பொறுத்த மட்டிலும் 10 லட்சம் என்பதெல்லாம் அவனுடைய பொருளாதாரத்திற்கு ரொம்பவே பெரிய விஷயம். இருந்தாலும் ஆனந்திக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுக்க அன்பு முயற்சி செய்கிறான்.

மகேஷ் நினைத்தால் கண்டிப்பாக ஆனந்திக்கு உதவ முடியும். ஆனால் மித்ரா அதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறாள். வீடு தேடி போன ஆனந்தியை மகேஷின் அப்பா, அம்மா ரொம்பவே மனது புண்படும் படி பேசிவிட்டார்கள்.

ருத்ரதாண்டவம் ஆடிய மகேஷ்

மகேஷை போனில் தொடர்பு கொண்டு ஆனந்தி பணத்தை கேட்டு விட கூடாது என மித்ரா முன்னமே பலே திட்டத்தை போட்டு விட்டாள். மகேஷின் அப்பாவை பகடைக்காய் போல் நகர்த்தி மகேசுக்கு எதிராகவே மாற்றிவிட்டாள்.

மகேஷ் இனி செக் புக்கில் கையெழுத்து போட்டு பணம் எடுக்க முடியாத அளவுக்கு தில்லைநாதன் செய்து விட்டார். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி மற்றும் அன்பு லோன் வாங்குவதற்காக பேங்கிற்கு செல்கிறார்கள்.

இந்த விஷயம் மகேசுக்கு எப்படியோ தெரிந்துவிடுகிறது. மகேஷ் நேரடியாக பேங்க் மேனேஜருக்கு போன் பண்ணி விசாரிப்பது போல் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு வேலை விஷயம் தெரிந்து மகேஷ் ஆனந்திக்கு அவன் தான் உதவ வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.

இருந்தாலும் இப்போதைக்கு மகேஷ் பல்லை பிடுங்கிய பாம்பு தான். அவன் நினைத்தாலும் ஆனந்திக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. தன்னை இந்த நிலைமைக்கு தள்ளிய தில்லைநாதனிடம் மகேஷ் ருத்ர தாண்டவம் ஆட அதிக வாய்ப்பிருக்கிறது.

மேலும் ஆனந்தியின் அண்ணன் வேலுவிடம் இருந்து திருடன் நகைகளை திருடி கொண்டு ஓடும் போது ஆனந்தி அந்த இடத்திற்கு வருகிறாள். ஒரு வேளை ஆனந்தி அவள் அண்ணனை இன்று சந்திக்க வாய்ப்பிருக்கிறது. வேலுவின் மூலம் ஆனந்தியின் பண பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News