சிங்கப்பெண்ணில் கடைசி நேரத்தில் ஹீரோவான மகேஷ்.. ஆனந்தியின் முடிவால் கதறி அழும் அன்பு!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. சீரியல் ரசிகர்கள் எது நடந்து விடக்கூடாது என்று நினைத்தார்களோ, கடந்த வாரம் முழுக்க அதுதான் நடந்தது.

போதாத குறைக்கு மகேஷ் முழு ஹீரோவாக மாறி நிற்கும் எபிசோடுகள் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கிறது.

கர்ப்பமாக இருப்பதாக டாக்டர் சொன்னதில் இருந்து ஆனந்தி நொந்து போயிருக்கிறாள். கடைசியாக மருத்துவர் ஆனந்தி பித்து பிடித்து வருவது போல் காட்டப்படுகிறது.

கடைசி நேரத்தில் ஹீரோவான மகேஷ்

கொட்டும் மழையில் சாலையில் நீர் தேங்கி இருப்பதால் சாக்கடை தொட்டியை திறந்து இருப்பது தெரியாமல் உள்ளே விழுந்து விடுகிறார்.

இந்த நேரத்தில் சரியாக வந்து மகேஷ் ஆனந்தியை காப்பாற்றுவது போல் காட்டப்படுகிறது. மேலும் டாக்டரிடம் ஆனந்திக்கு என்ன ஆச்சு என மகேஷ் கேட்கும்போது டாக்டர் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்வது போல் புரோமோவில் காட்டப்பட்டிருக்கிறது.

மேலும் ஆனந்தி தன்னை விட்டு விலகி இருப்பதே அன்பு அவனுடைய அம்மாவிடம் சொல்லி அழுது புலம்புவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

இரண்டாவது பரிசோதனையில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக சொல்லப்பட்டதும் மகேஷ் எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கிறான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment