செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சிங்க பெண்ணே சீரியலில் அன்புவை முந்தி கொண்ட மகேஷ்.. மொத்தமாய் மிரண்டு போன மித்ரா

Singapenne: சன் டிவியின் சின்ன பெண்ணே சீரியலில் எது நடக்கக்கூடாது என்று ரசிகர்கள் நினைத்தார்களோ அதுதான் இன்று நடக்கப் போகிறது. அப்பா அம்மாவின் கல்யாண நாள் விழாவில் சாதிக்க முடியாததை ஆனந்தியின் பிறந்தநாள் விழாவில் சாதிக்க வேண்டும் என ஏற்கனவே மகேஷ் முடிவெடுத்து விட்டான்.

நடுவில் கொஞ்சமாக சொதப்பினாலும் தன்னுடைய திட்டத்தை பக்காவாக நிறைவேற்றியது போல் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. நேற்று முழுக்க அன்பு மற்றும் ஆனந்தியின் காதல் காட்சிகள் பார்ப்பதற்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

அன்புவை முந்தி கொண்ட மகேஷ்

இன்றைய எபிசோடு எப்படி இருக்க போகிறதோ என்று நினைத்தால் இப்பவே பிபி ஏறுகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எல்லாம் வெளியான நிலையில் ஆனந்தி அந்த இடத்திற்கு வருவது போல் காட்டப்படுகிறது.

ஆனந்தி வந்தவுடன் பொக்கே கொடுத்து தன்னுடைய காதலை மகேஷ் சொல்வது போல் காட்டப்படுகிறது. அந்த இடத்தில் ஆனந்தியின் அப்பா அம்மா, அன்பு மற்றும் மித்ரா இருக்கிறார்கள். அன்பு என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கிறான்.

மித்ரா தன்னுடைய ஆதங்கத்தை எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் மிரண்டு போய் பார்ப்பது போல் இந்த ப்ரோமோ காட்டப்பட்டு இருக்கிறது. நேற்றைய எபிசோடில் மீண்டும் நந்தாவை காட்டினார்கள். போலீஸ் கஸ்டடியில் நந்தா வகையாக வாங்கிக் கொண்டிருக்கிறான்.

ஒரு வேளை நந்தா மித்ராவின் பெயரை சொல்லி, இதனால் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கேன்சல் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது. எப்படி பார்த்தாலும் மகேஷ் நினைத்தது நடக்க கூடாது என்பதுதான் சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்

Trending News