வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

மொத்த பிளானையும் கெடுத்து விட்ட மகேஷ்.. ஆனந்திக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு

Singapenne: வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைத்தது போல் என்று சொல்வார்கள். அப்படித்தான் சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலில் நேற்று மகேஷ் நடந்து கொண்ட விதம் இருந்தது. நந்தாவிடமிருந்து ஆனந்தியை காப்பாற்றும் அன்பு நான் தான் அழகன் என்று உண்மையை சொல்வான் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சம்பந்தமே இல்லாமல் மகேஷ் உள்ளே வந்து மொத்த சீனையும் மாற்றி விட்டான். நந்தாவை போலீசார் கைது செய்ததும் மகேஷ் ஆனந்தியையும் அவளுடைய தோழிகளையும் காரில் ஏற்றிக்கொண்டு நேராக ஹாஸ்டலுக்கு சென்றான்.

அங்கே வார்டனை பார்த்து நடந்த எல்லா உண்மையும் சொல்லி உங்க ஹாஸ்டலில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எக்கச்சக்க வசனங்களை பேசி பிரச்சனையே பெருசாகி விட்டான். ஆனந்தி மற்றும் அவளுடைய தோழிகள் மீது தற்போது வார்டன் கோபத்தில் இருக்கிறார்.

ஆனந்திக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி நந்தாவின் பேச்சை கேட்டு அன்பு மற்றும் அவளுடைய தோழிகளை வெறுத்து ஒதுக்கியதை பற்றி சொல்லி அழுது புலம்புகிறாள். அதே நேரத்தில் ஆனந்தி அழகன் என்பவனை காதலித்திருக்கிறாள் என்பதே தன்னுடைய அப்பாவிடம் சொல்லி மகேஷ் அழுது புலம்புகிறான்.

இது போதாது என்று ஆனந்தியின் பிறந்தநாள் வரப்போவதால் ஆனந்தியை நேரில் பார்க்க வேண்டும் என அவளுடைய அம்மாவும், சகோதரிகளும் ஆனந்தியின் அப்பாவிடம் கேட்பது போல் குரோமோ முடிந்திருக்கிறது. இனி ஆனந்தியின் பிறந்த நாளில் யார் என்ன பிளான் செய்து எப்படி கதையை ஓட்ட போகிறார்கள் என இனி தான் தெரியும்.

சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்

Trending News