புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மகேஷின் காதலுக்கு ஆனந்தியிடம் தூது போகும் அன்பு.. தவறாக புரிந்து கொள்ளும் ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் மீண்டும் முக்கோண காதல் கதை ஆரம்பித்து விட்டது. அன்பு மற்றும் மகேஷ் ஆனந்தியின் சொந்த ஊருக்கு போனது, சுயம்பு லிங்கத்தின் திட்டத்தை தவிடு பொடி ஆக்கினது என கடந்த வாரம் முழுக்க சீரியல் பரபரப்பாக இருந்தது.

சென்னைக்கு வந்த கையோடு மித்ரா மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாள். ஆனந்தியின் சொந்த ஊரில் இருக்கும் போதே மகேஷ் அன்பு இடம் தான் ஆனந்தியை காதலிப்பதாக மனம் திறந்து சொல்லி விட்டான்.

காதலை தியாகம் செய்து விடும் முடிவில் இருந்த அன்பு மீண்டும் மனம் மாறி ஆனந்தியின் அழகனாக மாற ஆரம்பித்திருந்தான். சென்னை திரும்பிய பிறகு அன்பு மற்றும் மகேஷ் இருவருக்குமே ஒரே நேரத்தில் பிரச்சனையை கிளப்பி விட்டு விட்டாள் மித்ரா.

மகேஷ் இனிமேல் கீழே இறங்கி வந்து ஆனந்தி மற்றும் அன்பு விடம் பேசவே முடியாதபடி செய்து விட்டார்கள். அதேபோன்று கருணாகரனுக்கு இணையாக அன்புக்கு கொடுக்கப்பட்டிருந்த பவரையும் பிடுங்கி விட்டார்கள்.

மகேஷின் காதலுக்கு ஆனந்தியிடம் தூது போகும் அன்பு

எப்பவுமே ஆனந்தி மற்றும் அன்பு விடம் சுற்றிக் கொண்டிருக்கும் மகேஷ் இனி அந்த இடத்திற்கு வர முடியாது. இதனால் கருணாகரன் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான். தன்னுடைய அனுமதி இல்லாமல் மகேஷுக்கு காபி கூட எடுத்துக் கொண்டு போக கூடாது என ஆனந்திக்கு உத்தரவு போட்டிருக்கிறான்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் அன்பு விடம் தனக்காக, ஆனந்த இடம் தன் காதலை பற்றி அன்பு சொல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறான். அன்புக்கு இந்த விஷயம் ரொம்ப நெருடலாகவே இருக்கிறது.

ஆனந்தி முன்பை விட அன்பு விடம் அதிகமாக நெருக்கம் காட்டுவதும் அவனுக்கு பிடித்திருக்கிறது. நண்பனுக்காக தூது செல்வதா இல்லை தன்னுடைய காதலை காப்பாற்றிக் கொள்வதாய் என தெரியாமல் இருதலை இரும்பாக அன்பு இப்போது இருக்கிறான்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி, அன்பு விடம் அழகன் யார் என்று கேட்கிறாள். உடனே அன்பு அழகன் வேறு எங்கும் இல்லை உங்கள் பக்கத்தில் தான் இருக்கிறான் என சொல்கிறான். ஒரு வேலை அன்பு மகேஷிடம் நெருங்கி பழகுவதால் மகேஷ் தான் அழகன் என ஆனந்தி தவறாக புரிந்து கொள்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News