Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் சுவாரசியமான திருப்புங்கள் உடன் ஆரம்பித்திருக்கிறது. போலி அழகனை நம்பி ஏமாந்த அதிர்ச்சியில் இருந்த ஆனந்தி ஓரளவுக்கு மனம் தேறி மீண்டும் கம்பெனிக்கு வந்திருக்கிறாள்.
அன்புக்கு ஆனந்தியின் பிறந்த நாளை பெரிய கொண்டாட்டமாக கொண்டாட வேண்டும் என்ற ஆசை. ஆனால் இந்த திட்டத்தை சொல்ல ஆள் இல்லை என்று நேரடியாக போய் மகேஷிடம் சொல்லிவிட்டான். மகேஷ் ஏற்கனவே இவர்கள் இருவருடைய காதலிலும் மங்களம் பாட காத்திருக்கிறான்.
மகேஷிடம் லீவு கேட்க போகிறேன் என்று அனுமதி கேட்டு கடைசியில் ஆனந்தியின் பிறந்தநாள் கொண்டாட்ட பிளானை சொல்லிவிட்டான். அதாவது ஆனந்தியை மகேஷ் ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு போக பிளான் செய்து, அன்பு பஸ் ஸ்டாண்டுக்கு போய் ஆனந்தியின் குடும்பத்தை ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு வருவது தான் அன்பு போட்ட திட்டம்.
அழகன், ஆனந்தி காதலுக்கு மங்களம் பாட போகும் மகேஷ்
ஆனால் மகேஷ் அந்தப் திட்டத்தை அப்படியே மாற்றி விட்டான். அன்பு விடம் ஆனந்தியை ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு போ என்று சொல்லிவிட்டு ஆனந்தியின் அப்பா அம்மாவை கூட்டிட்டு வருவதற்காக அவன் பஸ் ஸ்டாண்டுக்கு போயிருக்கிறான்.
இதில் என்ன கொடுமை என்றால் ஆனந்தியின் குடும்பத்திடம் அன்புவுக்கு முன்னரே மகேஷ் அறிமுகமாகி அவர்களுடைய மனதில் நல்ல இடத்தை பிடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஹாஸ்டலுக்கு அவளுடைய அப்பா அம்மா வந்த பிறகு ஒரு வேலை மகேஷ் தன்னுடைய காதலை குடும்பத்தினர் முன்னிலையில் ஆனந்தியிடம் தெரியப்படுத்தி விட்டால் ஆனந்தியின் மனநிலை எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை.
அதே நேரத்தில் நான்தான் உண்மையான அழகன் என்று சொல்ல காத்திருக்கும் அன்புக்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்து விடும்.
சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்
- ஆனந்தி, அன்பு காதலுக்கு ஆப்பு வைக்கும் மகேஷ்
- தேரை இழுத்து தெருவில் விட்ட மகேஷ்
- மொத்த பிளானையும் கெடுத்து விட்ட மகேஷ்