புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025

நம்பிக்கை துரோகி, அன்புவை கொலை செய்ய துணிந்த மகேஷ், குறுக்கே விழுந்த ஆனந்தி.. பரபரப்பான சிங்கப்பெண்ணே கிளைமேக்ஸ்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அன்பு மற்றும் ஆனந்தியின் காதல் மகேஷுக்கு எப்போது தெரியவரும் என்பது நேயர்களின் பெரிய எதிர்பார்ப்பு.

அவர்களின் காதல் மகேஷுக்கு தெரிந்த பிறகு அவன் இதை எப்படி எதிர்கொள்வான் என்பதை பார்ப்பதற்கே எல்லோரும் ஆர்வமாக இருந்தார்கள்.

சிங்கப்பெண்ணே கிளைமேக்ஸ்!

ஆனால் இந்த ப்ரோமோ நேயர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி தான். திருமணத்திற்கு அப்பா அம்மாவிடம் சம்மதம் கேட்க ஆனந்தி அன்புவை தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறாள்.

வார்டனுடன் அன்பு மற்றும் ஆனந்தி சவரக்கோட்டைக்கு பயணிக்கிறார்கள். அதே இடத்திற்கு மகேஷ் அவனுடைய அப்பா அம்மாவுடன் வருவது போல் காட்டப்படுகிறது.

ஏற்கனவே தில்லைநாதன் அன்பு மற்றும் ஆனந்தியின் காதலை பற்றி மகேஷிடம் சொல்லிவிட்டார். இது குறித்து மகேஷ் கேட்கும்பொழுது அன்பு எல்லாம் உண்மையையும் சொல்கிறான்.

மேலும் மகேஷின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வரும் பொழுது மகேஷ் அவனை கீழே தள்ளி விட்டு ஒரு பெரிய கல்லை தூக்கி அவன் தலையில் போடப் போகிறான்.

அந்த நேரத்தில் ஆனந்தி குறுக்கே வந்து விழுவது போல் காட்டப்பட்டு இருக்கிறது. இதை பார்த்த தில்லைநாதன், பார்வதி மற்றும் வார்டன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.

இந்த புரோமோவால் தற்போது இன்றைய எபிசோடுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

Trending News