புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்கப்பெண்ணில் அன்புவிடம் தன்னுடைய காதலை விட்டு கொடுத்த மகேஷ்.. ஆனந்திக்கு காத்திருக்கும் பேராபத்து

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கடந்த வாரம் முழுக்க ஹீரோ அன்புவை கண்ணில் காட்டாமலேயே ரசிகர்களை வெறுப்பேற்றி விட்டார் இயக்குனர்.

ஆனால் அந்த குறையை போக்கும் அளவுக்கு இந்த வாரம் முழுக்க அன்பு தான் அடுத்தடுத்த எபிசோடுகளில் நிறைந்திருக்க போகிறான். காயத்ரியின் பிரச்சனையை சரி செய்து விட்டு வரத்தான் லேட் ஆகிவிட்டது என ஆனந்தி சொல்லாமல் மௌனம் காக்கிறாள்.

இதை வேறு யாரும் சாதகமாக பயன்படுத்திவிட கூடாது என்பதால் வார்டன் ஆனந்தியை மகேஷிடம் ஒப்படைத்து விடுகிறார். தன்னுடைய வீட்டுக்கு ஆனந்தியை கூட்டிக் கொண்டு போகும் மகேஷுக்கு அங்கே பெரிய அதிர்ச்சி தான் காத்திருக்கிறது.

ஆனந்திக்கு காத்திருக்கும் பேராபத்து

மகேஷின் அம்மா ஆனந்தி வீட்டுக்குள் இருக்கவே கூடாது என்கிறார். வேறு வழி தெரியாமல் மகேஷ் ஆனந்தியை அன்புவின் வீட்டிற்கு அழைத்துப் போகிறான். அன்புவின் அம்மா மற்றும் தங்கச்சி ஏற்கனவே சொந்த ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு சென்றிருக்கிறார்கள்.

அதனால் அன்பும் ஆனந்தியை வீட்டுக்குள் சேர்த்துக் கொள்கிறான். அது மட்டும் இல்லாமல் ஆனந்தியை இனி பார்க்கவே கூடாது என்ற முடிவெடுத்த பிறகு எதனால் மகேஷ் சார் மீண்டும் ஆனந்தியை நம்மிடம் கொண்டு வந்து விட வேண்டும்.

என்னுடைய காதலே என்னிடம் வந்து சேர்ந்து விட்டதா என அன்பு ரொம்பவே குழம்பி போய் இருக்கிறான். அத்தனை பேர் கேட்டும் என்ன நடந்தது என்று சொல்லாத ஆனந்தி அன்பு என் கண்ணை பார்த்து சொல்லுங்கள் என கேட்டதும் என்ன நடந்தது என உண்மையை சொல்லுகிறாள்.

இது மகேஷுக்கு ஒரு வித கோபத்தை கொடுக்கிறது. இவ்வளவு நேரமாக நான் கேட்டேன் நீ எதையுமே சொல்லவில்லை அன்பு கேட்டதுமே சொல்கிறாயே என சொல்கிறான். ஆனந்தியை வேறு ஒரு ஹாஸ்டலில் சேர்க்கும் வரை அன்பு விடம் விட்டு செல்கிறான் மகேஷ்.

அன்புவுக்கு விடிந்ததும் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அன்பு வின் அம்மா மற்றும் தங்கச்சி வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள். ஆனந்தி வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறாள். அன்பு இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறான் என்று தெரியவில்லை.

ஊருக்கு போனதும் ஆனந்தியை வீட்டுக்கார் அழைத்து வந்திருக்கிறான் அன்பு என அவனுடைய அம்மா தவறுதலாக நினைப்பதற்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சுற்றி சுழன்று அடிக்கும் பிரச்சனைகளால் ஆனந்தி நொந்து போய் இருக்கிறாள்.

இப்படிப்பட்ட நேரத்தில் அன்புவின் அம்மா ஏடாகூடமாக ஏதாவது பேசினால் கண்டிப்பாக ஆனந்திக்கு அது பெரிய கஷ்டமானதாக அமைந்து விடும். அன்பு இந்த சூழ்நிலையை எப்படி கையாளுகிறான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News