வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சிங்கப்பெண்ணில் மித்ராவிடம் சவால் விட்ட மகேஷ்.. வேற லெவல் சம்பவம் லோடிங்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்க்கும் பொழுதே அடுத்த வாரம் எபிசோடுகள் ரணகளமாக இருக்கப் போவது தெரிகிறது.

நேற்றைய எபிசோடில் ஆனந்தி அன்புவின் அம்மாவிடம் நேரடியாக மாட்டிக் கொள்வாள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் நேக்காக தப்பித்து விட்டார்கள்.

ஆனந்தியை பேன்ட் சட்டையில் பார்த்த மகேஷ் தன்னை மறந்து ரொம்ப நேரம் சிரித்து விட்டான். அதுமட்டுமில்லாமல் ஆனந்தியை தனக்கு ரொம்ப பிடித்திருப்பதாக உளறிவிட்டு அதை சமாளித்தும் விட்டான்.

மித்ராவிடம் சவால் விட்ட மகேஷ்

மகேஷின் காருக்குள் போன ஆனந்தி மீண்டும் பாவாடை தாவணியை மாற்றிக் கொண்டாள். சரியாக மகேஷ் மற்றும் அன்பு ரோட்டில் நின்று கொண்டு பேசிகொண்டு இருக்கும்போது மகேஷ் அம்மா அந்த வழியாக காரில் வருகிறார்.

கம்பெனிக்கு போகாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறான் என யோசித்துக் கொண்டு இருக்கிறார். அந்த சமயத்தில் ஆனந்தி மகேஷ் காரில் இருந்து வெளியில் வருகிறாள். இது மகேஷின் அம்மாவுக்கு உச்சகட்ட கோபத்தை கொடுக்கிறது.

மகேஷ் அன்புவிடம் நானும் ஆனந்தியும் காரில் கம்பெனிக்கு போகிறோம். நீ எங்கள் பின்னாடி வா என்று சொல்லிவிட்டு போகிறான். மகேஷுக்கு அன்பு வேலையை ராஜினாமா செய்தது தெரியாததால் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் திரு திரு என்று முழிக்கிறார்கள்.

கண்டிப்பாக இன்றைய எபிசோடில் ஆனந்தி மகேஷிடம் அன்பு ராஜினாமா செய்ததை பற்றி பேச அதிக வாய்ப்பு இருக்கிறது. எதிர்பார்த்தபடி மகேஷ் அன்பு வேலையை விட்டு நிற்பதற்கு மித்ரா மற்றும் கருணாகரன் தான் காரணம் என நம்புகிறான்.

அவர்கள் இருவரையும் அழைத்து அன்புவை ஏன் வேலையை விட்டு அனுப்பினீர்கள் என்று கேட்பதற்கு மட்டும் இந்த மீட்டிங் இல்லை, மீண்டும் அன்பு வை இந்த கம்பெனிக்குள் கொண்டு வருவேன் என்பதை சொல்வதற்காகவும் தான் என சவால் விடுகிறான்.

இது மித்ரா மற்றும் கருணாகரனுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. கண்டிப்பாக மகேஷ் சொன்னால் அன்பு கம்பெனிக்கு வேலைக்கு வந்து விடுவான். அன்பு வீட்டில் இருந்து ஆனந்தி எப்படி வெளியில் வருகிறாள், அன்பு மீண்டும் கம்பெனிக்கு போன பெண் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News