ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ராமராஜனை விவாகரத்து செய்ய முக்கிய காரணம் இதுதான்.. 20 வருடங்களாக புருஷன் இல்லாமல் பரிதவிக்கும் நளினி

Actor Ramarajan and Nalini: அந்தக் காலங்களில் ராமராஜனின் எதார்த்தமான நடிப்பை யாராலும் மிஞ்ச முடியாத அளவிற்கு கொடிகட்டி பறந்தவர். முக்கியமாக ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் படங்களை விட இவருடைய படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்திருந்தால் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பார்.

அப்பொழுது இவருடன் ஜோடி போட்டு நடித்த நடிகை நளினியை 1987ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சந்தோஷமாக இல்லற வாழ்க்கையை நடத்தி இரட்டை குழந்தைகளைப் பெற்று எடுத்தார்கள். இப்படி சந்தோசமாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், இவர்கள் பிரிவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஜோசியம்.

Also read: ராமராஜனுக்கு போட்டியாக இறங்கிய லெஜன்ட்.. அடுத்த படத்திற்கு தயாரான அண்ணாச்சியின் புகைப்படங்கள்

அதாவது இவர்கள் வீட்டின் எதிர்ப்பையும் தாண்டி திருமணம் செய்து கொண்டதால் பல இன்னல்களை சந்தித்து இருக்கிறார்கள். அப்பொழுது இவர்கள் இருவருக்குமே ஜோசியத்தின் மேல் அதீத நம்பிக்கை இருந்திருக்கிறது. அதனால் வழக்கமாக பார்க்கும் குடும்ப ஜோசியரை பார்த்து எதிர்காலத்தை பற்றி கேட்டிருக்கிறார்கள்.

அப்பொழுது அவர் கூறியது உங்கள் பிள்ளைகள் வளர வளர ராமராஜனின் வாழ்க்கை நிலை குலையும் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு இருவருக்குமே பயம் வந்திருக்கு. உடனே இது சம்பந்தமாக மற்ற ஜோசியர்களிடம் கேட்டு நிறைய பரிகாரங்களை செய்திருக்கிறார்கள். ஆனால் அது எந்த பிரயோஜனமும் இல்லாமல், ஒரு மாற்றத்தையும் கொடுக்கவில்லை.

Also read: சாமானியனை தொடர்ந்து குவியும் பட வாய்ப்பு.. ராமராஜனுடன் ஜோடி போடும் 46 வயது நடிகை

பிறகு ஒரு கட்டத்தில் ராமராஜன், நளினிடம் உனக்கு நான் வேணுமா, பிள்ளைகள் வேணுமா என்று முடிவு பண்ணிக்கோ என்று கேட்டிருக்கிறார். அதற்கு நளினி நான் என் பிள்ளைகளுடன் இருந்து கொள்கிறேன். நீங்கள் தனியாகவே இருந்து நல்லபடியாக இருந்தால் எனக்கு அதுவே போதும் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் இவர்கள் பிரிந்து 20 வருடங்கள் ஆகிய நிலையிலும் ஒருவரை ஒருவர் மனதளவில் காதலை சுமந்து கொண்டு தனியாகப் பிரிந்து வாழ்கிறார்கள். ஆனால் எப்பொழுதெல்லாம் நளினி பேட்டி கொடுக்கிறாரோ, அப்பொழுதெல்லாம் அவர் கண்ணில் காதலையும் மனதில் ஆசையும் வைத்துக்கொண்டு பரிதவிக்கிறார் என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. பாவம் இந்த ஜாதகத்தால் இவர்கள் இருவரும் பிரிந்து மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

Also read: விவாகரத்து ஆனாலும் மனதில் காதலுடன் சுற்றி வரும் நடிகை.. ஏக்கத்துடன் ஏங்கி நிற்கும் மோகனின் வெற்றி நாயகி

Trending News