வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இனிமேல் இந்த மாதரி படம் பண்ண மாட்டேன், SMS பட இயக்குனர் வருத்தம்.. இது என்னடா காமெடிக்கு வந்த பஞ்சம்

சினிமாவில் எஸ்.ஏ.சந்திரசேகர், அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் எம்.ராஜேஷ். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, ஜீவா நடிப்பில் சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின், பாஸ் என்கிற பாஸ்கரன், ஒருகல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சாங்க, கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதில், சில படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றன.

சமீபத்தில் இவர் எழுத்து இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான காமெடி நகைச்சுவை படம் பிரதமர். இப்படத்தில் பிரியங்கா மோகன், நடராஜ் சுப்பிரமணியம், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீசான இப்படம் இதுவரை 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், எம். ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்கள் என தொடர்ந்து அவரது படங்களில் உருவக் கேலி, கிண்டல் செய்து வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றதாக பலரும் குற்றம்சாட்டியிருந்தனர். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் உருவக் கேலி காட்சிகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம். ராஜேஷ் தெரிவித்துள்ளதாவது

சினிமாவில் நுழைய வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னைக்கு வந்து, எஸ்.ஏ.சந்திரசேகர், அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். எஸ்.ஏசியிடம் ஒழுக்கத்தையும், அமீரிடம் ஒரு விசயத்தை முழுமையாகச் செய்யவும் கற்றுக் கொண்டேன். சிவா மனசுல சக்தி படத்தின் தொடர்ச்சியாக மிஸ்டர் லோக்கல் படத்தை இயக்கினேன். ஆனால் இப்படத்தில் சிவாவை முழுமையாக பயன்படுத்தவில்லை என வருந்துகிறேன்.

ஒரு மாதிரி திரைக்கதையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதை நான் புரிந்துகொண்டேன். நான் இயக்கிய படங்களில் காமெடிக்காக உருவக் கேலி, மத நம்பிக்கைகளை கிண்டலடித்ததற்கு நான் வருந்துகிறேன். இனி இயக்கும் படங்களில் பாசிட்டிவாக ஆரோக்கியமான காட்சிகள், வசனங்களில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

சந்தானம் – எம்.ராஜேஷ் கூட்டணி

எம். ராஜேஷின் படங்களில் முதலில் சந்தானம் தான் காமெடி கேரக்டரில் நடித்திருப்பார். அவர் பெண்களையும், உடன் நடித்த சக நடிகர்களையும் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்தது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்தாவது, தன் மீதான புகாரை ஒப்புக் கொண்டு வருந்தினாரே என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News