மக்கு பாக்யாவிற்கு புத்திசாலியான மகள், ஈஸ்வரிக்கு வச்ச ஆப்பு.. ஓவராக துள்ளிய கோபிக்கு ஏற்பட்ட அவமானம்

bhakkiyalakshmi (50)
bhakkiyalakshmi (50)

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், யார் என்ன சொன்னாலும் நான் நினைக்கிற தான் நடக்க வேண்டும் என்ற ஆணவத்தில் ஈஸ்வரி, எல்லோரையும் டார்ச்சர் பண்ணி வருகிறார். இதில் தற்போது இனியா மாட்டிக் கொண்டார். அதாவது இனியா, ஆகாஷை காதலித்ததை தாங்கிக்கொள்ள முடியாத ஈஸ்வரி உடனடியாக இனியாவிற்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.

அதனால் வீட்டிற்கு மாப்பிள்ளை குடும்பத்தை நிச்சயதார்த்தம் பண்ணுவதற்கு வர சொல்லிவிட்டார். இதனை கேள்விப்பட்ட பாக்கிய, இதுவரை என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்களை நான் இழந்து இருக்கிறேன். உங்களுக்காக நான் பொறுமையாக இருந்து எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து இருக்கிறேன். ஆனால் என் மகள் விஷயத்தில் நான் அப்படி இருக்க முடியாது.

என்னைத் தவிர யாருக்கும் அந்த உரிமையும் கிடையாது என்று சொல்லி ஈஸ்வரிடம் சண்டை போடுகிறார். உடனே ஈஸ்வரி நிச்சயதார்த்தம் மட்டும் நடக்கவில்லை என்றால் நான் உயிரோடையே இருக்க மாட்டேன் என்று சென்டிமென்ட் பிளாக்மெயில் பண்ண ஆரம்பித்து விட்டார். ஆனால் இதற்கெல்லாம் அசராத பாக்யா, உயிரோடு இருக்கவே வேண்டாம் என்று சொல்லி ஈஸ்வரியின் வாயை அடைக்கிறார்.

ஆனாலும் கொஞ்சம் கூட அடங்காத ஈஸ்வரி, நான் செத்தாலும் பரவாயில்லை உனக்கு அப்படித்தானே என்று கேட்க ஆரம்பித்து விட்டார். அதற்கு பாக்கியம் நான் அப்படி சொல்லவில்லை ஆனால் இதையே வைத்துக் கொண்டு எல்லாரையும் பிளாக்மெயில் பண்ணினால் நான் சும்மா இருக்க மாட்டேன். நீங்க வாழ்ந்து முடிச்சுட்டீங்க என் மகள் வாழ்க்கை இனி தான் ஆரம்பமாகப் போகிறது.

அதனால் உங்க பிளாக் மெயிலுக்கு பயந்து எல்லாம் நான் இருக்க மாட்டேன் என்று சண்டை போட ஆரம்பித்து விட்டார். பிறகு இனியா யாரிடமும் எதுவும் சொல்லாமல் பாக்யாவின் ஃபோனில் இருந்து போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணி எனக்கு கட்டாயம் கல்யாணம் பண்ணி வைப்பதற்கு என்னுடைய பாட்டியும் அப்பாவும் முடிவு பண்ணி விட்டார்கள். என்னை நீங்கள் தான் வந்து காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிடுகிறார்.

உடனே இனியா, ஈஸ்வரி சொன்னபடி நிச்சயதார்த்தத்திற்கு கிளம்பி விடுகிறார். அத்துடன் பாக்கியா மற்றும் அங்கு இருப்பவர்களிடம் யாரும் எனக்காக சண்டை போட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி கீழே மாப்பிள்ளை வீட்டார்கள் முன்னாடி போய் நின்று விடுகிறார். உடனே ஈஸ்வரி சந்தோஷத்தில் பாக்யாவை காபி கொண்டுட்டு வரச் சொல்கிறார்.

பாக்யாவும் மக்கு மாதிரி எல்லாவற்றையும் செய்கிறார், பிறகு நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்காக தாம்பல தட்டு மாற்றப் போய்விட்டார்கள். அந்த நேரத்தில் போலீஸ் வந்து நிறுத்த சொல்லி பொண்ணுக்கு விருப்பம் இல்லாமல் இங்கு எதுவும் நடக்க கூடாது. யார் இதை எடுத்து நடத்துறாங்க என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். உடனே இதை சமாளிப்பதற்காக ஈஸ்வரி பொண்ணோட அம்மாக்கு மட்டும்தான் இந்த நிச்சயதார்த்தத்தில் விருப்பமில்லை.

ஆனால் அதற்காக இதை நடத்தாமல் விடமாட்டோம் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று சொல்கிறார். போலீஸ், பொண்ணுக்கு விருப்பமில்லை என்று சொல்லி நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். என்ன பண்ணினாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டாங்க என்று ஆணவத்தில் இருந்த ஈஸ்வரி மூஞ்சில் இனிய கரியை பூசி விட்டார். அத்துடன் தனக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கிறது என்ற நினைப்பில் ஆடிய கோபிக்கும் மிகப்பெரிய ஏமாற்றம் ஆகிவிட்டது.

Advertisement Amazon Prime Banner