புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல.. ரியாஸ்கான் மீது மலையாள நடிகை கொடுத்த புகார்

Riyaz Khan: தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் ரியாஸ்கான். இவரது மனைவி உமாரியாசும் சினிமாவில் புகழ்பெற்ற நடிகை தான். சமீபத்தில் இவர்களது மகன் சாரிக்கின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த சூழலில் இப்போது கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல என்ற வடிவேல் டயலாக்குக்கு ஏற்ப ரியாஸ்கான் மீது புகார் ஒன்று வந்துள்ளது. சமீபகாலமாக கேரளாவில் நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் பற்றி பல செய்திகள் வெளியாகி வருகிறது.

அதுவும் நேரடியாகவே நடிகைகள் தங்களுக்கு நடந்த பிரச்சனையை வெளிப்படையாக சொல்லி வருகிறார்கள். அவ்வாறு மலையாள நடிகை ரேவதி சம்பத் ரியாஸ் கான் மீது புகார் கொடுத்திருக்கிறார். அதாவது தொலைபேசி வாயிலாக தகாத உறவுக்கு அழைத்தாராம்.

ரியாஸ் கான் மீது புகார் கொடுத்த மலையாள நடிகை

revathi-sampath
revathi-sampath

அதோடு தனது தோழிகளையும் ஏற்பாடு செய்து தருமாறு ரியாஸ்கான் கேட்டதாக ரேவதி புகார் கொடுத்திருக்கிறார். இந்தச் செய்தி இப்போது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து அங்கு பெரிய நடிகர்களின் பெயர் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகிறது.

கேரளா அரசு சார்பில் பிரபல பெண் வழக்கறிஞரான ஹேமா தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து நடிகைகளுக்கு நடக்கும் வன்புணர்வு பற்றி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியிருந்தனர்.

இப்போது அந்த அறிக்கை வெளியிட்டிருக்குப் பிறகு நடிகைகள் நேரடியாகவே ஊடகங்களில் தங்களுக்கு நடந்த பிரச்சனையை துணிச்சலாக கூறி வருகிறார்கள். மேலும் இப்போது ரியாஸ் கானை சினிமாவில் இருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும் என பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

மலையாள சினிமாவில் அதிகரிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை

Trending News