வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

Viduthalai: மலையாள சினிமா உலகின் வெற்றிமாறன்.. மொத்த வித்தையையும் காட்டி பங்கம் பண்ணும் ஆல்ரவுண்டர்

வெற்றிமாறன் விடுதலை 2 படத்தில் பிசியாக இருக்கிறார். முதல் பாகம் கொடுத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே முதல் பாகம் எடுக்கும் போதே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் பாதி எடுத்து விட்டார்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது.

ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகம் முடிந்தபாடு இல்லை. அதற்கு காரணம் வெற்றிமாறன் தான். விடுதலை 2 படத்திற்கு எடுக்கும் காட்சிகளில் எல்லாம்தாவது கூறிக் கொண்டே இருக்கிறாராம் பல காட்சிகளில் முழு திருப்தி அடையாமல் மீண்டும் மீண்டும் எடுத்து வருகிறாராம்.

மொத்த வித்தையையும் காட்டி பங்கம் பண்ணும் ஆல்ரவுண்டர்

விஜய் சேதுபதி மிகவும் பிஸியாக இருக்கிறார் அவர் கால்ஷீட் கொடுப்பதும் மீண்டும் செல்வதுமாய் இருக்கிறார். மிஷ்கின் இயக்கும் ட்ரெயின் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடிக்கிறார். அவராலும் இந்த ப்ராஜெக்ட் சிறுது தள்ளிப் போகிறது.விஜய் சேதுபதியை வாலிப வயது தோற்றத்தில் காட்டுவதற்கு புது புது டெக்னாலஜிகளை உபயோகிக்கிறார்கள்.

வெற்றிமாறன் போல் அதே குணாதிசயத்தோடு மலையாள சினிமாவில் பிரித்திவிராஜ் இருக்கிறார்.
அவரும் எல்லா படத்திலும் எளிதாக திருப்தி அடைவதில்லை. வெற்றிமாறன், பிரித்திவிராஜ் இரண்டு பேரும் ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்டவராய் இருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சிகளுக்காக பல பேரை படுத்தி எடுத்து விடுவார்களாம்.

கடைசியாக பிரித்விராஜ் எடுத்த படம் ஆடு ஜீவிதம் அந்தப் படம் வசூலை வாரி குவித்தது. இப்பொழுது லூசிபர் 2 படத்தை பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார் பிரித்திவிராஜ். அதுமட்டுமின்றி `சலார் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்சமயம் டைசன் என்ற படத்தை இயக்கியும் வருகிறார்.

Trending News