Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தமிழ் பக்கம் பெத்த காசுன்னு ஓடி வந்த இயக்குனர்.. சிம்பு ரஜினி என அடித்த ஜாக்பாட்

தமிழ் பக்கம் பெத்த காசுன்னு ஓடி வந்த இயக்குனர்.. சிம்பு ரஜினி என அடித்த ஜாக்பாட்

ஒரு பக்கம் சிம்பு தக்லைப் படபிடிப்பில் கடும் பிசியாக இருக்கிறார். ரஜினி வேட்டையன் முடித்த கையோடு கூலி படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதன் பின்னர் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். வயதான பின்பு தான் படங்களில் நடித்து […]

ஒரு பக்கம் சிம்பு தக்லைப் படபிடிப்பில் கடும் பிசியாக இருக்கிறார். ரஜினி வேட்டையன் முடித்த கையோடு கூலி படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதன் பின்னர் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். வயதான பின்பு தான் படங்களில் நடித்து தள்ளுகிறார் சூப்பர் ஸ்டார்.

இதற்கிடையில் சிம்பு ஒரு கதைக்கு பச்சை கொடி காட்டி இருக்கிறார். 2018 மலையாள படத்தை இயக்கிய ஜூடூ ஆண்டனி ஜோசப் சிம்புவிற்கு ஒரு கதையை கூறி ஒப்புதல் வாங்கி இருக்கிறார். சிம்புக்கு கதை மிகவும் பிடித்து போனதால் இதற்காக முதல் கட்டமாய் 30 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார்.

சிம்பு ரஜினி என அடித்த ஜாக்பாட்

மலையாளத்தில் 2018 படம் சூப்பர் ஹிட் ஆனது. வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களையும், தண்ணீரில் தத்தளித்து கஷ்டப்பட்டவர்களையும், அந்த படத்தில் கண்முன் நிறுத்தி இருப்பார். இந்த படத்திற்கு பின் அவருக்கு எல்லா பக்கமும் நிறைய ஆபர் வந்தது.

சிம்பு படத்தை முடித்துவிட்டு ரஜினியுடன் கூட ஒரு படம் பண்ணவிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக மலையாள சினிமாவில் சம்பளம் என்பது மிக மிக குறைவாகத்தான் கொடுப்பார்கள். ஆனால் அப்படியே நேர்மாறாய் இந்த பக்கம் நடக்கிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கும், ஹீரோக்களுக்கும் கொட்டிக் கொடுப்பார்கள். அதனால் அவர் தமிழ் தமிழ் படங்களை இயக்க இங்கே வந்துவிட்டார். சிம்பு மற்றும் ரஜினிகாந்த் படங்கள் தற்சமயம் இவர் லைன் அப்பில் இருக்கிறது. ஆனால் இந்த படங்கள் முடிவதற்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிடும்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.