Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் அவருடைய மொத்த சொத்தையும் கதிருக்கு எழுதி கொடுத்து விட்டார். இதற்கு தான் நான் காத்துக் கொண்டிருந்தேன் என்பதற்கு ஏற்ப கதிர் இத்தனை நாளாக நல்ல தம்பியாக நடித்து வந்தது வீண் போகலை என்பதற்கு ஏற்ப மொத்த சொத்தையும் வாங்கிய பின்பு மாறிவிட்டார்.
சும்மாவே கதிர் காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடுவாரு, இப்ப கையில உடுக்கையும் கொடுத்தாச்சு. இனிமேல் ருத்ர தாண்டவம் தான் என்பதற்கு ஏற்ப கதிர் ஆடப்போகிறார். கூடவே நந்தினி அப்பாவும் மகளின் வாழ்க்கையும் குடும்பத்தையும் பற்றி யோசிக்காமல் மருமகனை வைத்து காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார். இதற்கு குணசேகரன் இருந்தாலே பரவாயில்லை என்பதற்கு ஏற்ப தான் நான்கு மருமகள்களும் இனி அவஸ்தைப்பட போகிறார்கள்.
சொத்து நமக்கு கொஞ்சம் கூட இல்லை என்பதை தெரிந்து கொண்ட ஞானம் அப்படியே நெஞ்ச பிடித்து உட்கார்ந்து விட்டார். இதனால் ரேணுகா ஆவேசமாகி கதிரை ஒவ்வொரு வார்த்தைகளாலும் தாக்கி பேசி அவமானப்படுத்தி விட்டார். அத்துடன் நந்தினையும் கேள்வி கேட்கும் விதமாக ஒரு சில கேள்விகளை கேட்டு கஷ்டப்படுத்தி விட்டார். ஆனாலும் எதற்கும் அசராத கதிர் நான் இப்படித்தான் இனி என்னுடைய ஆட்டம் வேற மாதிரி இருக்கும் என்பதற்கு ஏற்ப எல்லாத்துக்கும் துணிந்து விட்டார்.
நந்தினியும் இதை எப்படி எடுத்துக் கொள்வது என்ன செய்வது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். முக்கியமாக இந்த ரேணுகா என்ன பேசுகிறோம் எது பேசுகிறோம் என்று தெரியாமல் வார்த்தைகளை ஈசியாக வெளியிடுவார். அந்த வகையில் இனி கணவரின் நிலைமையே பார்த்து ஒவ்வொரு நாளும் புலம்பி தவிக்கும் பொழுது கதிரை அசிங்கமாகவும் அவமானப்படுத்தியும் பேசப்போகிறார்.
இதை தாங்கிக் கொள்ள முடியாத நந்தினியும் பதிலடி கொடுக்கும் விதமாக ஏதாவது பேச இரண்டு பேருக்கும் இனி சண்டை முட்டிக்க போகிறது. பெண்கள் அவர்கள் நினைத்தபடி லட்சியத்தில் சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு ஆயிரம் தடங்கள் வர தான் செய்யும். ஆனால் தற்போது அவருடைய ஒற்றுமையை இல்லாமல் போய்விட்டால் எப்படி முன்னேறுவார்கள் என்பது தான் ஜீவானந்தம் டுவிஸ்ட் வைத்திருக்கிறார்.
இதனை அடுத்து சொத்துக்களை வாங்கும் பொழுது குணசேகரன் ஜெயிலிலிருந்து வெளியே வந்ததும் அனைத்து சொத்துக்களையும் திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று கதிர் ஒரு பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு குணசேகரனிடமிருந்தும் கையெழுத்து வாங்கி வைத்திருந்தார். அதெல்லாம் இனி தேவையே இல்லை என்பதற்கு ஏற்ப வக்கீல் இடம் இருந்து அந்த பத்திரத்தை வாங்கி கிழித்து தூர போடுகிறார்.
இதுவரை மல்லுவேட்டி மைனராக சுற்றிக்கொண்டு இருந்த கதிர் இனிமேல் கதிர் சட்டை போட்டு அராஜகம் பண்ணும் பழைய மாரிமுத்துவாக மாற ஆரம்பித்து விட்டார். ஆனாலும் முதல் பாகம் முடியும் அந்த தருணத்தில் நந்தினிக்கு ஆபத்து என்று தெரிந்ததும் கதிர் துடித்த துடிப்பு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட கதிரை பார்த்து விட்டு தற்போது கொடூரமாக மாறி இருக்கும் கதிர் ஆட்டம் அளவுக்கு இல்லாமல் போகப் போகிறது. இதையெல்லாம் ஓவர் டேக் பண்ணி குணசேகரன் வீட்டு பெண்கள் முன்னேறி காட்டப் போகிறார்கள்.