சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கோலங்கள் ஆதிக்கு இணையாக வில்லத்தனத்தை காட்டும் மல்லுவேட்டி மைனர்.. தர்ஷனுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணும் குணசேகரன்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தைகள் என்ன என்று சொல்வதற்கு ஏற்ப ஆட்டம் போட்ட குணசேகரனின் கொட்டத்தை அடக்கும் விதமாக ஒட்டுமொத்த மருமகளும் சேர்ந்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். ஆனால் நான் இல்லை என்றாலும் சரி நான் போட்ட விதை உங்களை நிம்மதியாக இருக்க விடாது என்பதற்கு ஏற்ப குணசேகரன் அவருடைய சொத்துக்கள் மொத்தத்தையும் கதிர் பேருக்கு எழுதி வைத்துவிட்டார்.

சொத்துக்கு அதிபதி இனிமேல் நான் தான் ராஜா என்பதற்கு ஏற்ப குணசேகரன் எழுதி வைத்த சொத்தை ஆட்டைய போட்ட பிறகு கதிர் மொத்தமாக வில்லனாக மாறிவிட்டார். அதனால் தான் அண்ணன் ஞானம் நெஞ்சு வலியால் ஆஸ்பத்திரியில் இருப்பதை தெரிந்தும் அதற்கு ஒரு ட்ராமாவை போட்டு தர்ஷன் மற்றும் ஆதிரையை நம்ப வைத்து விட்டார்.

ஆனால் கதிர் போடும் வேஷம் அங்கு இருக்கும் நான்கு பெண்களுக்கும் தெரிந்து விட்டது. இதனால் கதிரின் ஆட்டத்தை அதிகரிக்க விடமாட்டோம் என்பதற்கு ஏற்ப ஜனனி, கதிரிடம் மோதுவதற்கு தயாராகி விட்டார். ஆனால் கதிர் நீ எல்லாம் எனக்கு பெரிய விஷயமே இல்லை என்பதற்கு அலட்சியப்படுத்திவிட்டு போய்விட்டார்.

பிறகு தன்னுடைய கணவர் அட்டகாசம் பண்ணியதை தாங்கிக் கொள்ள முடியாத நந்தினி குற்ற உணர்ச்சியால் வருந்துகிறார். ஆனால் உனக்கும், உன் வீட்டுக்காரர் செய்வதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஞானம் மற்றும் ரேணுகா பேசிய நிலையில் நந்தினி பெருமூச்சு விட்டு வீட்டிற்கு திரும்பி விட்டார்.

வீட்டுக்கு வந்த நந்தினி கதிர் ஆடிய ஆட்டத்தை கேள்விப்பட்டு ஆவேசமாக பேசுகிறார். அதற்கு ஜனனி அவர் ஆடி ஆட்டத்திற்கு நானே பதிலடி கொடுத்து விட்டேன். ஆனாலும் பொறுமையாக இருக்க நேரமில்லை, ஞான மாமாவிற்காக நாம் அதிரடியாக முடிவை எடுக்க தான் வேண்டும் என்று சொல்கிறார்.

கதிரும், தர்ஷன் இடம் உங்க அப்பா வெளியே வந்த பிறகு சொத்துக்கள் அனைத்தையும் உங்க அப்பாவிடம் கொடுத்து விட்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று சத்தியம் பண்ணி நம்ப வைத்து விட்டார். இந்த ஆதிரையும் திருந்த மாட்டேன் என்பதற்கு ஏற்ப குணசேகரின் ரத்தம் உடம்பில் இருப்பதால் பச்சோந்தி மாதிரி நேரத்துக்கு நேரம் மாறிக் கொள்கிறார்.

இவர்கள் இருவரையும் தனக்கு சாதகமாக வைத்துக்கொண்ட கதிர் அவருடைய அடுத்த ஆட்டத்தை காட்டும் விதமாக குணசேகரன் சொத்தை விற்பதற்கு தயாராகி விட்டார். இவருடைய வில்லத்தனத்தை பார்க்கும் பொழுது கோலங்கள் சீரியலில் நடித்த ஆதியின் கேரக்டர் அப்படியே கண்ணு முன் வந்துட்டு போகுது. அந்த அளவிற்கு கோலங்கள் ஆதிக்கு இணையாக கதிர் அவருடைய வில்லத்தனத்தை காட்டுகிறார்.

இதனை அடுத்து குணசேகரன் கூட ஜெயிலில் இருக்கும் நபர், அவர் விட்டு சொத்துக்கள் அனைத்தையும் அதிகாரம் பண்ணுவதற்கு ஒரு மாப்பிள்ளை வரவேண்டும். ஏனென்றால் எனக்கு இருப்பது ஒரே மகள் தான், அவளுக்கு கல்யாணம் ஆகி வரப்போகிற மாப்பிள்ளை தான் எங்க வீட்டு ராஜாவாக எல்லா சொத்துக்களையும் அனுபவிக்க வேண்டும் என்று குணசேகரன் புத்தியில் உரைக்கும் படி சொல்கிறார்.

உடனே குணசேகரன் அப்படி ஒரு மாப்பிள்ளை இருக்கிறான் என்று அவருடைய பையன் தர்ஷனை கட்டி வைப்பதற்கு பேசி முடிக்க போகிறார். இந்த குணசேகரன் பொருத்தவரை யாருக்காவது ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கணும் போல, தர்ஷினி கல்யாண டிராக் ஃபெயிலியர் ஆனதால் தற்போது தர்ஷனுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணி ஏற்பாடுகளை பண்ண போகிறார்.

Trending News