திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

போட்ட காச கூட எடுக்கல அதுக்குள்ள அலப்பறையா.? 2 நாளில் சக்சஸ் மீட் கொண்டாடிய மாமன்னன் டீம்

Maamannan: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்த மாமன்னன் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அமைச்சராகி விட்ட உதயநிதியின் கடைசி படம் என்பதாலேயே இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றார் போல் இயக்குனரும் போகும் இடமெல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி வந்தார். அதிலும் கமல் முன்னிலையிலேயே தேவர்மகனை பற்றி அவர் பேசியது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிவந்த மாமன்னன் முதல் நாளில் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் போகப்போக படத்திற்கான வரவேற்பு கணிசமாக குறைந்தது.

Also read: மாரி செல்வராஜுக்கு உதயநிதி கொடுத்த பரிசு.. விலை மட்டும் இத்தனை லட்சமா.?

அந்த வகையில் இப்படம் முதல் நாளில் 6 கோடி வரை வசூலித்து இருந்தாலும் அதற்கு அடுத்த நாளில் 4 கோடி வரை மட்டுமே வசூலித்திருந்தது. அதை தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. இது பட குழுவினருக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

மாமன்னன் டீம்

maamannan-team
maamannan-team

அதன்படி 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இப்போது வரை 15 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. இப்படி போட்ட காசை கூட எடுக்காத நிலையில் பட குழு சக்சஸ் மீட்டை கேக் வெட்டி கொண்டாடி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் இரண்டே நாளில் இப்படி ஒரு அலப்பறையை கூட்டியது தான் வியப்பாக இருக்கிறது.

Also read: உதயநிதிக்காக தலையை கொடுத்து அவமானப்பட்ட பிரபலம்.. கூட இருந்து குழி வெட்டிய மாரி செல்வராஜ்

அந்த வகையில் மாரி செல்வராஜ், உதயநிதி, கீர்த்தி சுரேஷ் உட்பட அனைவரும் ஏ ஆர் ரகுமான் வீட்டிற்கு சென்று அவர் கையாலேயே கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். இந்த போட்டோக்கள் அனைத்தும் இப்போது மீடியாவில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

2 நாளில் சக்சஸ் மீட் கொண்டாடிய மாமன்னன் டீம்

maamannan-success-meet
maamannan-success-meet

முன்பெல்லாம் ஒரு படம் வசூலில் சக்கை போடு போட்டு தியேட்டரில் அதிக நாட்கள் ஓடினால்தான் இது போன்ற வெற்றி விழா கொண்டாட்டங்கள் எல்லாம் நடக்கும். அப்படிப்பட்ட நிலையில் இரண்டு நாட்களில் சக்சஸ் மீட்டை மாமன்னன் டீம் கொண்டாடி வருவது வேடிக்கையாக தான் இருக்கிறது.

Also read: லியோ படத்தால் மாமன்னனுக்கு ஏற்பட்ட சிக்கல்.. விஜய்க்கு மட்டும் நடக்கும் அநியாயம்

Trending News