வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

யாருகிட்ட விளையாடுற, தொலைச்சிடுவேன்.. அஜித்துக்காக தயாரிப்பாளரிடம் மல்லு கட்டிய மம்பட்டியான்

அஜித் வளரும் காலத்தில் பல அவமானங்களை சந்தித்து வந்தார். அப்படி அவர் பட்ட அவமானங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல அஜித் வளரும் காலத்தில் அவர் கேரியரை கெடுக்கும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது. அந்த சமயத்தில் அஜித்திடம் மல்லு கட்டிய மகனை அடக்கி இருக்கிறார் மம்மட்டியான்.

அதுமட்டுமல்ல தயாரிப்பாளர் இடமும் ஸ்ட்ரீட் ஆன கண்டிஷன் போட்டு இருக்கிறாராம். 1999 ஆம் ஆண்டு ராஜ்கபூர் இயக்கத்தில் அஜித், மீனா நடிப்பில் வெளியான ஆனந்த பூங்காற்றே படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் போது அஜித்துக்கு எதிர்பாராத விதமாக ஆக்சிடென்ட் நடந்து விட்டது.

Also Read: கமலின் அடுத்த இயக்குனர் இவர்தான்.. அஜித்தின் வெற்றி இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்

அப்போது ஆனந்த பூங்காற்றே படத்தில் அஜித் கமிட் ஆகி படத்தின் படப்பிடிப்பும் சில நாட்கள் சென்றது. பிறகு அஜித்துக்கு விபத்து ஏற்படவும் படம் தள்ளிப் போகக் கூடாது என்பதற்காக ஹீரோவை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் ரோஜா கம்பெனிஸ், காஜா மொய்தீன்.

அஜித்தை நிராகரித்துவிட்டு தியாகராஜனிடம் சென்று பிரசாந்தை புக் செய்தது, ஆனால் அஜித்தை நிராகரித்த விஷயம் தியாகராஜனுக்கு தெரியாது. உண்மையான விஷயத்தை கேள்வி பட்ட தியாகராஜன் தொலைச்சிடுவேன். அஜித் தான் இந்த படத்தில் நடிக்கணும்.

Also Read: மோசமான ஆட்டிட்யூடால் பல வாய்ப்புகளை இழந்த விக்னேஷ் சிவன்.. பதறி ஓடிய முதலாளி

நான் ஒரு சினிமாவில் ஊறிப் போன ஆளு , யார்கிட்ட விளையாடுற என காஜா மொய்தீனை ஒரு வாங்கு வாங்கி இருக்கிறார். சினிமாவிலும் அரசியல் நடக்கும் என்பதை மூத்த இயக்குனரும் நடிகருமான தியாகராஜனுக்கு நன்றாகவே தெரியும். இதற்கு அவருடைய மகன் பிரசாந்தையும் பகடைக்காயாய் பயன்படுத்தியதை ஒருபோதும் அவர் அனுமதிக்கவில்லை.

சினிமாவில் பல படங்களை தயாரித்தும் இயக்கியும் நடித்தும் ரசிகர்களிடம் மம்பட்டியான் ஆக மாஸ் காட்டிய தியாகராஜன் அஜித்தின் வளர்ச்சிக்கு அவருடைய மகன் பிரசாந்த் குறுக்கே நிற்கக் கூடாது என்று அறிவுரை சொல்லி இருக்கிறார். மிகவும் நேர்மையுடன் நடந்து கொண்ட தியாகராஜன் மகன் பிரசாந்த் தற்போது வரை வளரும் நடிகராகவே இருக்கிறார். ஆனால் அஜித் கோலிவுட்டின் டாப் நாயகன் லிஸ்டில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார்.

Also Read: 27 நாடுகளில் 24 மணி நேரத்தில் துணிவு செய்த சாதனை.. முதல் முறையாக இந்தியளவில் மிரட்டி விட்ட அஜித்

Trending News