Mammootty: மலையாள திரை உலகில் இப்போது பெரும் புயல் அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த கேரளா புயல் எப்போது வேண்டுமானாலும் கோலிவுட்டில் மையம் கொள்ளும் என எதிர்பார்த்து வருகின்றனர்.
ஏற்கனவே கேரளாவில் பிரபலமாக இருக்கும் ஜெயசூர்யா, நிவின்பாலி உட்பட பல நடிகர்கள் மீது மீ டூ புகார் எழுந்து வருகிறது. அதேபோல் மோகன்லால் பொது நிகழ்ச்சி ஒன்றில் கேவலமாக செய்த ஒரு வேலையும் வீடியோவாக வைரலாகி வருகிறது.
இந்த சூழலில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி பற்றிய ஒரு விஷயத்தை பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு மம்முட்டி ஒரு படத்தில் நடித்த போது தமிழில் தனுஷின் அசுரன் மூலம் பரிட்சையமான மஞ்சு வாரியரும் அதில் நடித்திருக்கிறார்.
கொழுந்துவிட்டு எரியும் கேரள விவகாரம்
அப்போது மம்முட்டியின் உதவியாளர் மஞ்சுவிடம் சூட்டிங் முடிந்த பிறகு மாலை சாருடைய ரூமுக்கு வரவேண்டும் என சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் அந்த கிழவன் ரூமுக்கு எல்லாம் வர முடியாது என்று சொன்னாராம்.
அதன் பிறகு மறுநாள் அவர் வழக்கம் போல ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார். ஆனால் தன்னை அவமானப்படுத்திய கோபத்தில் மம்முட்டி அவருக்கு ஒரு காட்சி கூட வைக்காமல் அலைக்கழித்து இருக்கிறார்.
இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் தற்போது வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். மம்முட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல் அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பதாகத்தான் இத்தனை நாள் வரை அனைவரும் நினைத்திருந்தனர்.
ஆனால் இப்படி ஒரு விவகாரம் இருக்கும் என்பது பத்திரிக்கையாளர் சொல்லி தான் தெரிகிறது. யாரை நம்புவது என்றே தெரியவில்லை என இதை பார்த்த ரசிகர்கள் குமுறி வருகின்றனர். இன்னும் சிலர் நிச்சயமாக இது உண்மையாக இருக்காது என மம்முட்டிக்கு ஆதரவாகவும் கூறி வருகின்றனர்.
புது பஞ்சாயத்தில் சிக்கிய மம்முட்டி
- மலையாளத்தில் உச்சகட்ட பயத்தில் கதறவிட்ட 6 திரில்லர் படங்கள்
- மலையாள மீ டூ பற்றி கேட்கப்பட்ட கேள்வி
- மம்முட்டியின் தரமான 7 ஹிட் படங்கள்