Bramayugam Movie Review: ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் மிரள வைக்கும் திகில் கதையாக உருவாகி இருக்கும் படம் தான் பிரமயுகம். நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தை பார்த்த அனைவரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
19ஆம் நூற்றாண்டு கதையாக தொடங்கும் இப்படத்தில் மம்முட்டியின் நடிப்பு கொலை நடுங்க வைப்பதாக இருக்கிறது. முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை பாணியில் வெளிவந்துள்ள பட விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம். கேரளா வடக்கு பகுதியில் நடக்கும் போரின் காரணமாக அரண்மனையில் பாட்டு பாடும் தேவன் காட்டுப்பகுதிக்குள் ஓடுகிறார்.
உயிரை காப்பாற்றிக் கொள்ள வரும் அவர் காட்டில் இருக்கும் பாலடைந்த ஒரு அரண்மனைக்கு செல்கிறார். அங்கு கொடுமன் போட்டி (மம்மூட்டி) தன் சமையல்காரருடன் வாழ்ந்து வருகிறார். அவரிடம் அடைக்கலம் கேட்கும் தேவன் அங்கிருந்து வெளியில் செல்ல முயற்சிக்கும் போது பல அமானுஷ்யங்களை சந்திக்க நேர்கிறது.
அதிலிருந்து அவர் வெளிவந்தாரா? கொடுமன் போட்டி யார்? அந்த அரண்மனையின் வரலாறு என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விடையாக அமைகிறது இந்த பிரமயுகம். எழுத்தாளர் கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய ஐதீகமாலா என்ற நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பின் ஒரு கதை தான் இந்த பிரமயுகம்.
Also read: 72 வயதிலும் சமீபத்தில் ஹிட்டு கொடுத்த மம்முட்டியின் 5 படங்கள்.. ஜோவுடன் அசத்திய காதல் தி கோர்
அந்த கதை கருவை மையப்படுத்தி மம்மூட்டியின் மிரட்டல் நடிப்பை சேர்த்து வித்தியாசமான பாணியில் படத்தை கொடுத்து இருக்கும் இயக்குனரை முதலில் பாராட்ட வேண்டும். இக்கதைக்கு மம்மூட்டியின் நடிப்புதான் உயிர் நாடி. இப்படியும் ஒரு மனிதர் நடிப்பாரா என்று வியக்க வைக்கும் அளவுக்கு அவர் கொடுமன் போட்டியாக வாழ்ந்துள்ளார்.
அவருடைய கம்பீரமான குரலும், மிரள வைக்கும் சிரிப்பும், தோரணையான நடிப்பு என ஒவ்வொன்றும் படத்திற்கு வலு சேர்த்து உள்ளது. இவருக்கு அடுத்தபடியாக பின்னணி இசை தான் மற்றொரு ஹீரோ என்று சொல்லலாம். காட்சிக்கு காட்சி வித்தியாசம் காட்டி இருப்பது புது உணர்வை கொடுத்திருக்கிறது.
அதிலும் திகில், மர்மம் போன்ற ஒவ்வொன்றுக்கும் வரும் இசை பார்ப்பவர்களை நடுங்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. அதேபோன்று கேமரா ஒளிப்பதிவும், பழங்கால அரண்மனையை அப்படியே கண்முன் காட்டி இருந்த விதமும், கலை நுணுக்கங்களும் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
Also read: ஜெயிலர் வர்மன் போல் மாறிய மம்மூட்டி.. கறை படிந்த பல், மிரட்டும் லுக்கில் வெளிவந்த பிரமயுகம் போஸ்டர்
இயக்குனர் முதல் பாதியில் கதையை எடுத்துச் சென்ற விதம் நம்மை படத்தோடு ஒன்றை வைத்து விடுகிறது. அதை தொடர்ந்து இரண்டாம் பாதியில் காட்டப்படும் சஸ்பென்ஸ் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனாலேயே இப்படைப்பு பார்ப்பவர்களுக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது. ஆக மொத்தம் பிரமயுகம்-பிரமிப்பு.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5