வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

LCU-வில் இணையும் மம்முட்டி? அவரின் நீண்ட நாள் கனவு இதுதானா? இதோ அவரே கூறிய பதில்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விறுவிறுப்பான மேக்கிங் மற்றும் மிகவும் சுவாரசியமான திரைக்கதை, நடிகர்கள் தேர்வு போன்ற விஷயங்களுக்காகவே தமிழ் திரையுலகில் பெயர் எடுத்து டாப் இயக்குனர்களில் முக்கியமானவராக இன்று இருக்கிறார்.

மாநகரம் படத்தில் ஆரம்பித்த அவரது திரைப்பயணம் தொடர்ந்து கைதி. மாஸ்டர். விக்ரம். லியோ என அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்துள்ளது. தற்போது உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படம் எல்.சி.யு வில் வராது. இது ஒரு ஸ்டாண்ட் அலோன் படம் தான் என்று கூறி இருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனாலும், ரசிகர்கள் மத்தியில் இது ஒரு எல்.சி.யு வாக இருக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே, இப்படி தான் லியோ படத்திற்கும் சொன்னார், ஆனால் கடைசி நேரத்தில் ஆம் எல்.சி.யு தான் என்று கூறி அதிரடி காட்டினார்.

எல்.சி.யுவில் இணையும் மம்முட்டி?

சூழ்நிலை இப்படி இருக்க, இந்த எல்சியூவுக்கு தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்மூட்டி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கூலி படத்தில் நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் தன்னை படக்குழுவினர் இன்னும் அணுகவில்லை என்று பதில் அளித்தார். மேலும் எப்போது வேண்டுமானாலும் இது தொடர்பாக தன்னை அணுகலாம் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி, எல்.சி.யூ.-வுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அதில் இணைய மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதை கேட்ட ரசிகர்கள், அப்போ confirm கூலி படத்தில் மம்முட்டி இருப்பார் போல. தளபதி படத்திற்கு பிறகு இந்த காம்போவை நீண்ட நாளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டும் இருக்கின்றனர். ஏற்கனவே எல்.சி.யு- வில் விஜய், சூர்யா, கமல், கார்த்தி, ராகவா லாரன்ஸ், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட நடிகர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் இந்த பட்டியலில் மம்முட்டியும் ரஜினியும் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Trending News