பாடலாசிரியர்,கவிஞர் என பன்முகத் தன்மை வாய்ந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், தமிழ் சினிமாவில் தற்போது வரை பல பாடல் வரிகளை எழுதி அசத்தி வருகிறார். இவரின் பாடல் வரிகளுக்கும், கவிதைகளுக்கும் தனி ரசிகர்கள் உண்டு.
அப்படி இருக்கும் பட்சத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் வைரமுத்துவின் பாடல் வரிகள் தெறிக்க விட்டிருக்கும். இதில் ஏ ஆர் ரஹ்மானின் இசையும் சேர்ந்து உருவாக்கப்பட்ட 5 திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.
Also read: மணிரத்னம் அழைத்தும் தயக்கம் காட்டும் ரஜினி.. சூப்பர் ஸ்டார் மனதில் இருக்கும் ரகசியம்
இருவர்: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான இருவர் திரைப்படத்தில், இடம்பெற்ற ஆயிரத்தில் நான் ஒருவன், ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி, கண்ணைக் கட்டிக் கொள்ளாதே, நறுமுகையே, பூ கொடியின் புன்னகை, உடல் மண்ணுக்கு, உன்னோடு நான், வெண்ணிலா வெண்ணிலா உள்ளிட்ட எட்டு பாடல்களையும் வைரமுத்து வரிகளிலேயே எழுதப்பட்டு ஹிட்டடித்த பாடல்களாகும்.
அலைபாயுதே: 2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில், மாதவன், ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான அலைபாயுதே திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் வைரமுத்துவின் வரிகளிலேயே அமைந்தது. இதில் பச்சை நிறமே, சிநேகிதனே, காதல் சடுகுடு, என்றென்றும் புன்னகை, எவனோ ஒருவன் உள்ளிட்ட பாடல்கள் இன்று வரை 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிடித்தமான பாடல்களாக அமைந்துள்ளது.
Also read: மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி.. சபாஷ், சரியான முடிவு!
குரு: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இயக்கப்பட்ட குரு திரைப்படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன், மாதவன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்த நிலையில், அத்தனை பாடல்களுக்கும் பாடல் வரிகளை எழுதியவர் வைரமுத்து. இதில் மையா மையா, நன்னாரே, ஆருயிரே, ஒரே கனா, ரெண்டு மாங்கா, ஹே மாண்புறு மங்கையே உள்ளிட்ட அத்தனை பாடல்களும் சக்கை போடு போட்டது.
ராவணன்: நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான, ராவணன் திரைப்படத்தின் அத்தனை பாடலுக்கும் வைரமுத்துவின் பாடல் வரிகள் ஹிட்டடித்தது என்று சொல்லலாம். காட்டுச் சிறுக்கி, உசுரே போகுது, கோடு போட்டா, கெடா, கள்வரே உள்ளிட்ட அனைத்து பாடல்களும் தாறுமாறு ஹிட்டாக அமைந்தது.
Also read: அதை மட்டுமே சாப்பிட்டு 20 கிலோ கம்மியான ஜெயம் ரவி.. இது சாத்தியமா என குழம்பிய மணிரத்னம்
உயிரே: மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான உயிரே திரைப்படத்தின் பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார். என்னுயிரே, தக்க தையா, நெஞ்சினிலே, கண்ணீரே, பூங்காற்றிலே உள்ளிட்ட வைரமுத்து எழுதிய அத்தனை பாடல் வரிகளும் மனதை உருக்கும் வகையில் அமைந்தது. இத்திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசை கூடுதல் பலமாக அமைந்தது.