பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியுள்ளார். அவ்வாறு இரண்டாம் பாகத்தில் பெரிதும் ஆதித்ய கரிகாலன் மற்றும் நந்தினியின் கதாபாத்திரம் பேசப்பட்டது.
இந்நிலையில் சிறு வயது நந்தினியாக சாரா நடித்திருந்தார். விக்ரமின் தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் நிறைய படங்களில் இப்போது நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராய்க்கு பொருந்தும் விதமாக சாரா இருந்தார். அதேபோல் விக்ரமின் சிறு வயது ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திற்கு மணிரத்னம் தேடிப்பிடித்து ஒரு ஆளை தயார் செய்திருந்தார்.
Also Read : பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வசூலை தாண்டியதா PS2.? முதல் வார கலெக்சன் ரிப்போர்ட்
அவரைப் பார்ப்பதற்கு அச்சு அசல் சிறுவயது விக்ரம் போலவே இருக்கிறார். அவருடைய நிஜப்பெயர் சந்தோஷ். சிறு வயது முதலே சினிமா மீது அதீத ஈடுபாடுடன் சந்தோஷ் இருந்திருக்கிறார். மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கான ஆடிஷனுக்கு 5 வருடங்களுக்கு முன்பே கலந்து கொண்டிருக்கிறார்.
மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறோம் என்பதற்காக பல கலைகளையும் கற்று இருக்கிறார். ஆனால் இந்த படத்தில் சந்தோஷ் ஐந்து நாட்கள் மட்டும் தான் நடித்தாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடித்த போது அவருக்கு எந்த சண்டைக் காட்சிகளும் இடம்பெறவில்லையாம்.
Also Read : இணையத்தை கலக்கும் வானதி-பூங்குழலி.. படு கிளாமராக பொன்னியின் செல்வன் ஹீரோயின்ஸ்
ஆகையால் அவர் கற்றுக் கொண்ட கலைகள் பொன்னியின் செல்வன் படத்திற்கு பயன்படவில்லை என்றாலும் அடுத்ததாக அவர் நடிக்கும் படங்களில் பயன்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பொன்னியின் செல்வன் படத்தில் அவரது நடிப்பை பார்த்து அடுத்தடுத்த படங்களில் அவருக்கு வாய்ப்பு வந்த வண்ணம் இருக்கிறதாம்.
மற்ற மொழிகளில் பிரம்மாண்ட படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழ் மொழியில், தமிழர்களின் பெருமையை போற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் தன்னுடைய பங்களிப்பும் இருப்பது பெருமையாக நினைப்பதாக சிறு வயது ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஷ் கூறியுள்ளார்.

Also Read : சோழ, பாண்டியர்களுக்கு இடையே நடக்கும் வசூல் போட்டி.. யாத்திசை, பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்