புதன்கிழமை, ஜனவரி 22, 2025

7 நாள் வசூலில் அடித்து நொறுக்கும் பொன்னியின் செல்வன்.. புதுப்படங்களை இறக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்

மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். கிட்டத்தட்ட 70 வருட காலமாக பொன்னியின் செல்வன் நாவலை படமாக இயக்க பல பிரபலங்கள் முயற்சி செய்தனர். ஆனால் மணிரத்னம் தான் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் கதையை பல ரசிகர்கள் படித்துள்ளனர். அதனால் இப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே இருந்தது. எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்ற கேள்வியும் இருந்தது.

Also read: வேகமாக பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை தொட்ட 3 படங்கள்.. ரஜினிக்கே டஃப் கொடுத்த பொன்னியின் செல்வன்

ஆனால் மணிரத்தினம் ரசிகர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்துள்ளார். மற்ற வரலாற்று பாடங்களை விட பொன்னியின் செல்வன் மிகவும் எதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்கள் ஆகவே காட்சிகளை வடிவமைத்து இருந்தார். அதுவே படத்தின் வெற்றிக்கு ஒரு பக்க பலமாக அமைந்தது.

அதாவது ஹீரோக்களுக்கு முக்கியத்துவம்முள்ள கதாபாத்திரமாக இருந்தாலும் ஓவராக கற்பனை செய்யக் கூடிய அளவிற்கு சண்டைக்காட்சிகள் அதெல்லாம் எதுவும் இருக்காமல் மிகவும் எதார்த்தமான சண்டைக்காட்சிகளும் அன்றைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகள் பொற்காசுகள் உட்பட அனைத்தையும் அலசி ஆராய்ந்து படத்தில் பாடல்கள் முதற்கொண்டு தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மணிரத்னம் இயக்கி இருந்தார்.

Also read: வாழ்நாள் வசூலை 3 நாட்களில் குவித்த பொன்னியின் செல்வன்.. மணிரத்தினத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி

தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 130 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும் இது வரைக்கும் குறைந்த நாட்களில் 100 கோடிக்கு மேல் தமிழ்நாட்டில் மட்டும் எந்த படங்களும் வசூல் சாதனை படைக்கவில்லை முதல்முறையாக பொன்னியின் செல்வன் இந்த சாதனையை படைத்துள்ளது.

மணிரத்னம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாம் பாகத்தை மிகப்பெரிய அளவில்  வெளியிட திட்டமிட்டுள்ளார். தற்போது விறுவிறுப்பாக பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்தின் பட வேலைகள் நடைபெற்றுவருகின்றன, கூடிய விரைவில் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தை வெளியிடுவார்கள் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

Also read: மிரளவைத்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல்.. 21 வருடத்திற்குப் பின் மணிரத்னம் செய்த சாதனை!

Trending News