வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நாவலையும், திரைக்கதையையும் பார்த்து குழம்பும் ஆடியன்ஸ்.. லாஜிக்கை விளக்கி கூறிய மணிரத்தினம்

மணிரத்தினம் இயக்கத்தில் நேற்று வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ஆனாலும் நாவலை கரைத்து குடித்திருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் திரைப்படத்தை பார்த்துவிட்டு அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக பல கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.

அதாவது கல்கி தன்னுடைய நாவலில் எழுதி இருந்த பல விஷயங்களை மணிரத்தினம் திரைப்படத்தில் மாற்றி இருப்பதாக ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்திலும் சில முரண்பாடான காட்சிகள் ரசிகர்களை குழப்பம் அடைய வைத்திருக்கிறது.

Also read: வாரிசு, துணிவு முதல் நாள் வசூலை தூக்கி சாப்பிட்ட பொன்னியின் செல்வன் 2.. பண மழையில் மணிரத்தினம் 

அந்த வகையில் மணி சார் கல்கியின் நாவலுக்கு நியாயம் சேர்க்கவில்லை எனவும் ரசிகர்கள் தங்கள் நெற்றிக்கண்ணை திறந்துள்ளனர். இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் படத்துக்கு எதிரான சில கருத்துக்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் நாவலையும், திரைக்கதையையும் பார்த்து குழம்பிப் போயிருக்கும் ரசிகர்களுக்காக மணிரத்தினம் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதாவது நாவலில் சொல்வது போன்று சினிமாவில் ஒரு கதையை சொல்லிவிட முடியாது. அதில் பல சவால்கள் இருக்கிறது. நாவலுக்கு முடிவு என்பது எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். ஆனால் சினிமாவிற்கு அது உச்சத்தில் இருக்க வேண்டும். அதனாலேயே இதில் கிளைமேக்ஸ் காட்சியில் சில மாறுதல்களை ஏற்படுத்த வேண்டி இருந்தது.

Also read: மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் பொன்னியின் செல்வன்.. பாகுபலி விட ஆயிரம் மடங்கு ஸ்பெஷல் ஏன் தெரியுமா?

இது சிரமமாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை சரியாக சொல்லி இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாவலில் படித்த பெரும்பாலான கதாபாத்திரங்களும், காட்சிகளும் திரையில் காண்பிக்கப்படவில்லை. சொல்ல வேண்டியதை ரத்தின சுருக்கமாக சொல்லி இருக்கும் மணிரத்னம் கல்கியின் நாவல் இருக்கும் அந்த உயிர் படத்தில் அப்படியே இருக்கிறது என கூறியுள்ளார்.

அந்த வகையில் மொத்த நாவலையும் திரைப்படமாக விவரிக்க வேண்டும் என்றால் இந்த இரண்டு பாகங்கள் காணாது. அதனாலேயே மணிரத்னம் சில விஷயங்களை சேர்த்தும், குறைத்தும் படத்தை கொடுத்திருக்கிறார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் நாவல் வெறியர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: சோழ ராஜ்யத்தை யார் கைப்பற்றியது? சிலிர்க்க வைத்த மணிரத்தினம், பொன்னியின் செல்வன்-2 முழு விமர்சனம்

Trending News