ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மாஸ் ஹீரோக்களில் அதிகம் தோல்வி கொடுத்த நடிகர்.. கட்டம் சரியில்லாத கைப்பிள்ளைக்கு மணிரத்தினம் கொடுத்த ஆதரவு

மாஸ் ஹீரோ ஒருவருக்கு ஒரு படம் ஓடவில்லை என்றால் அடுத்து எப்படியாவது இரண்டு மூன்று படங்களில் ஒரு ஹிட் படம் கொடுத்து விடுவார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய மார்க்கெட்டை இழக்காமல் தொடர்ந்து சினிமாவில் நீடித்து இருக்க முடியும். ஆனால் பெரிய ஹீரோ ஒருவர் கடந்த சில வருடங்களாக தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார்.

ஆனாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவரை நாடி வந்தாலும் பெரிய ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறி வந்தார். அப்போது தான் கடவுள் போல வந்த மணிரத்னம் மாஸ் ஹீரோவை கை கொடுத்து தூக்கி விட்டுள்ளார். ஆகையால் அந்த் நடிகர் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

Also Read : ராஜமௌலியை தூக்கி வைத்து பேசிய மணிரத்னம்.. அவர் இல்லைனா, பொன்னியின் செல்வன் இல்லையாம்

அதாவது சியான் விக்ரம் தான் தொடர்ந்து பிளாப் படங்கள் மட்டுமே கொடுத்து வந்தார். மகான், கோப்ரா என பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்கள் எடுத்தாலும் தோல்வியை தான் தழுவியது. எப்படி இதிலிருந்து மீண்டு வந்து ஒரு ஹிட் படத்தை கொடுப்பது என விக்ரம் பெரிதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது தான் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் பட வாய்ப்பு விக்ரமை தேடி வந்தது. இதில் ஆதித்யா கரிகாலனாக சிறந்த நடிப்பை விக்ரம் வெளிப்படுத்தி இருந்தார். மேலும் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.

Also Read : ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் மணிரத்தினம்.. 500 கோடி வசூல் போதாது, ஏப்ரல் 28 நடக்கப் போகும் சம்பவம்

இப்போது பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி படுஜோராக நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களுக்கு விக்ரம் சுற்றுப்பயணமும் மேற்கொண்டு இருந்தார். அதுமட்டுமின்றி அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இந்த படத்தைப் பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் வைரலாகி வருகிறது.

ஏனென்றால் இப்படத்தின் கதையை வித்தியாசமாக இருக்கும் என்பதாலும், விக்ரமின் கெட்டப்பும் வேற லெவலில் உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை விரைந்து முடித்து இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Also Read : மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் கொடுத்த 5 ஹிட் படங்கள்.. ஜோவையே காதலில் உருக வைத்த மேடி

Trending News