வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னின் செல்வன் 2 ரிலீஸ் தேதியை லாக் செய்த மணிரத்தினம்.. ஜெயிலருக்கு பின் பிரம்மாண்ட வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் பல சாதனை படைத்தது. கல்கியின் நாவலை தழுவி உருவான இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் முதல் பாகம் அனைவரையும் கவர்ந்த நிலையில் இரண்டாவது பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர்.

அந்த அளவுக்கு அதன் முதல் பாகம் ட்விஸ்ட் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து முடிந்திருந்தது. ஏற்கனவே மணிரத்னம் இந்த இரண்டாம் பாகம் அடுத்த கோடைக்கு வெளிவரும் என்று கூறியிருந்தார். ஆனால் எந்த தேதியில் வெளிவரும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 அடுத்த வருடம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவர இருக்கிறதாம்.

Also Read: கமல், மணிரத்தினத்தை காப்பி அடித்த விஷால்.. கடைசியில் அசிங்கப்பட்டது தான் மிச்சம்

இது பற்றிய அறிவிப்பை தான் லைக்கா இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறது. இதற்காகவே ரசிகர்கள் இப்போது ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டு இருந்தது. அதை அடுத்து முதல் பாகம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்திற்கான சில டெக்னிக்கல் வேலைகளை தற்போது பட குழு பார்த்து வருகிறது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் முதல் படத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் இன்னும் பல சுவாரஸ்யங்களுடன் எடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த நாவலை ரசிகர்கள் பலமுறை படித்திருந்தாலும் திரையில் பார்த்து ரசிக்கவும் அவர்கள் விரும்புகின்றனர். அதன் அடிப்படையில் நாவலின் மையக்கருத்தை குலைக்காமல் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்போது இரண்டாம் பாகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

Also Read: மணிரத்னம் இயக்கத்தில் தோல்வியடைந்த 5 படங்கள்.. யானைக்கும் அடி சறுக்கும் என நிரூபித்த படம்

இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. மேலும் இரண்டாம் பாகத்தில் பலரும் எதிர்பார்த்த ஆதித்த கரிகாலனின் மர்ம மரணம் எந்த அளவுக்கு விளக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இப்பவே பொன்னியின் செல்வன் ஃபீவர் பலருக்கும் ஆரம்பித்துள்ளது.

இந்த வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மணிரத்தினம் கமல்ஹாசனுடன் இணையும் படத்திற்கான வேலைகளை தொடங்க இருக்கிறார். அதை அடுத்து ரஜினியுடன் இணைந்து ஒரு படம் பண்ணவும் தயாராகி வருகிறார். அந்த வகையில் மணிரத்னம் இப்படத்தின் மூலம் மீண்டும் பிஸியாகி இருக்கிறார். அதேபோன்று குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பொன்னியின் செல்வனை மிஞ்சிய கெட்டப்பில் கங்கனா ரனாவத்.. சந்திரமுகியாக வாங்கிய சம்பளம்

Trending News