செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜெயராமின் தொப்பைக்காக மணிரத்னம் செய்த வேலை.. பெரிய மனுஷன் செய்ற வேலையா இது

மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மெகா பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்துள்ள இந்த திரைப்படத்திற்கு தற்போது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

அதில் நடித்த நடிகர், நடிகைகள் உட்பட பலரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதிலும் முக்கியமாக ஆழ்வார்கடியான் நம்பி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்காக அவர் எப்படிப்பட்ட கடின உழைப்பை கொடுத்திருக்கிறார் என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Also read:எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா மணிரத்னம்.? பொன்னியின் செல்வன் முழு விமர்சனம்

அதாவது கதைப்படி ஜெயராம் தொப்பையுடன் இருக்க வேண்டும். ஆனால் அவர் தொப்பையில்லாமல் இருந்திருக்கிறார். இதை பார்த்த மணிரத்தினம் கொஞ்சம் பூசினார் போன்று தொப்பையுடன் வாருங்கள் என்று கூறியிருக்கிறார். இதற்காக ஜெயராமும் கஷ்டப்பட்டு உடலை ஏற்றி தொப்பையுடன் வந்திருக்கிறார்.

ஆனாலும் திருப்தி அடையாத மணிரத்தினம் சில தில்லாலங்கடி வேலையை பார்த்திருக்கிறார். எப்படி என்றால் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்காக டயட் போன்றவை செய்து கொண்டிருக்கும்போது, மணிரத்தினம் ஜெயராமின் ரூமிற்கு மட்டும் தினமும் இரவு பீர் கொடுத்து அனுப்புவாராம்.

Also read:பிரம்மாண்டத்தை மிஞ்சிய பொன்னியின் செல்வன்.. தீயாக பரவும் ட்விட்டர் விமர்சனம்

அதை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் குடித்தே தீர வேண்டும் என்ற கட்டளை வேறு போடுவாராம். அப்பொழுதுதான் காலையில் பார்க்கும்போது வயிறு தொப்பை விழுந்தது போல் தெரியுமாம். இதற்காக ஜெயராமும் மணிரத்தினம் சொன்னபடி கேட்டு நடந்திருக்கிறார்.

இப்படித்தான் அந்த ஆழ்வார்கடியான் நம்பி கதாபாத்திரத்திற்காக ஜெயராம் ரிஸ்க் எடுத்து இருக்கிறார். தற்போது வெளிவந்துள்ள இந்த தகவல் ஒரு பக்கம் சுவாரஸ்யமாக இருந்தாலும் மறுபக்கம் ஆச்சரியமாகவும் இருக்கிறது. மிகப் பெரிய இயக்குனரான மணிரத்னம் கதாபாத்திரத்திற்காக இந்த அளவுக்கு மெனக்கெடுவாரா என்று பலரும் வியந்து பேசி வருகின்றனர்.

Also read:பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கு வெறித்தனமாக காக்க வைத்திருக்கும் மணிரத்தினம்.. செம ட்விஸ்ட்

Trending News