திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதியை பின்னுக்கு தள்ளிய மணிரத்னம்.. அசால்டாக 5 நாளில் செய்த சாதனை

தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி குடும்ப ஆடியன்ஸ் விஜய்க்கு உள்ளதால் இவரது படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. ஒரு குடும்பத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜய் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

இதனால் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக விஜய் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி விஜய்யின் பிகில், சர்கார் போன்ற படங்கள் வெளியாகி ஒரு வாரத்திற்குள்ளாகவே 100 கோடி வசூல் செய்தது. மேலும் மாஸ்டர் படமும் வசூலில் பட்டையை கிளப்பி இருந்தது.

Also Read : விஜய்யுடன் கூட்டணி போடும் சூப்பர் ஸ்டார்.. தளபதி-67 சம்பவம் பெருசா இருக்கும் போல லோகேஷ் ப்ரோ

இந்நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார் மணிரத்தினம். இப்படத்தை லைக்கா உடன் கைகோர்த்து மணிரத்தினம் 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார். இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.

ஏஆர் ரகுமான் பொன்னியின் செல்வன் படத்தில் இசை அமைத்திருந்தார். கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளில் படம் வெளியாகி இருந்தது.

Also Read : உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவர உள்ள 8 படங்கள்.. பிரம்மாண்டத்தை எதிர்நோக்கி பொன்னியின் செல்வன் 2ம் பாகம்

பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ஐந்து நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்து விட்டது. அதுமட்டுமின்றி இப்போது வரையுமே 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இன்னும் கூடிய விரைவில் 500 கோடி வசூல் செய்துவிடும் என கூறப்படுகிறது.

இதுவரை தமிழ்நாட்டில் மிகக் குறுகிய காலத்தில் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்டை எடுத்தால் அதிகம் விஜயின் படங்கள் தான் இருக்கும். ஆனால் தற்போது தளபதியே வசூலில் பின்னுக்கு தள்ளி உள்ளார் மணிரத்தினம். மேலும் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த வருகிறது.

Also Read : வேகமாக பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை தொட்ட 3 படங்கள்.. ரஜினிக்கே டஃப் கொடுத்த பொன்னியின் செல்வன்

Trending News