Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

மணிரத்னத்தின் அடுத்த பிரம்மாண்டம்! மீண்டும் திரையில் வந்தியத்தேவன்!

மணிரத்னத்தின் அடுத்த பிரம்மாண்டம்! மீண்டும் திரையில் வந்தியத்தேவன்!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படைப்புகளை வழங்கிய இயக்குநர் மணிரத்னம், அடுத்ததாக உருவாக்கவுள்ள படம் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.குறிப்பாக,அவர் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’படத்தில் கார்த்தி ஏற்று நடித்த வந்தியத்தேவன் கேரக்டரை மையமாகக் கொண்டு புதிய கதையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்தக் கதையை முதலில் நடிகர் சூர்யாவிடம் மணிரத்னம் கூறியதாகவும்,அதைத் தொடர்ந்து தற்போது தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பெயர்கள் இந்தப் புதிய படத்திற்காகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சூர்யா மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு குறித்தும் செய்திகள் பரவி வருகின்றன.தெலுங்கு நடிகர் நானியின் பெயரும் இந்தப் படத்துடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது.


ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதில் வந்தியத்தேவனாக கார்த்தியின் நடிப்பு பெரிதும் கவனம் பெற்றது.இதனால் அந்தக் கேரக்டரின் பின்னணியில் மற்றொரு படம் உருவாகுமா?என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.


இருப்பினும்,மணிரத்னத்தின் அடுத்த படம் குறித்த நடிகர்கள் தேர்வு,கதைக்களம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தொடர்பான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.தற்போது வெளியாகும் செய்திகள் அனைத்தும் ஆரம்பக்கட்டத் தகவல்களாகவே உள்ளன.படக்குழுவின் அறிவிப்பு வெளியான பிறகே இந்தப் புதிய படம் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.