திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

600 படங்களுக்கு மேல் நடித்த மாணிக் பாட்ஷா-வின் நண்பர்.. ரீ-என்டரியில் இயக்குனராக எடுக்கும் புது அவதாரம்

Baashha Fame CharanRaj: ரஜினி அவருடைய 48 வருட சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 170 படங்களுக்கும் மேல் நடித்து சூப்பர் ஸ்டாராக தற்போது வரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய படங்களில் மிகவும் பொக்கிஷமான படமாக பார்க்கப்பட்டு வருவது 1995 ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா படம் தான்.

இந்தப் படத்தில் முதலில் சாந்தமான மாணிக்கம் கேரக்டரில் நடித்த இவர் திடீரென்று இவருடைய நண்பர் இறப்பிற்கு பின் மாணிக் பாட்ஷாவாக அவதாரம் எடுத்திருப்பார். இதில் இவருடைய நண்பராக நடித்தவர் தான் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் சரண்ராஜ். இவர் பாட்ஷா படத்தில் அன்வர் பாட்ஷாவாக நடித்திருக்கிறார்.

Also read: ரஜினியே நடிக்கிறாரு நான் நடிச்சா என்ன.? விஜய் மகன் என்னோட ஃபேன் தான் என சொல்லிட்டு திரியும் காமெடி பீசு

இவர் கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பல மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரை முக்கால்வாசி வில்லன் ஆகவே பல படங்களில் நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட இவர் தற்போது ரீ என்டரி கொடுத்திருக்கிறார். அதுவும் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இயக்குனராக தரமான கதையுடன் வந்திருக்கிறார்.

அதாவது கொஞ்சம் காலமாக சினிமாவில் அவதரிக்காமல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இவர் தினமும் கடற்கரை ஓரமாக வாக்கிங் போய்க் கொண்டிருப்பாராம். அப்பொழுது எதர்ச்சியாக ஒருவரை சந்தித்து தினமும் அவரிடம் பேசும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் மூலம் அந்த நண்பர் அவரின் சொந்தக் கதையை சொல்ல சொல்ல, இதுவே நாம் ஒரு படமாக எடுக்கலாம் என்று இவருக்கு தோன்றியிருக்கிறது.

Also read: ரஜினி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் படத்தை தயாரித்த சின்ன நடிகர்.. ஒத்த பைசா இல்லாமல் இறந்து போன சோகம்

அப்படி இவர் எடுத்திருக்கும் படம் தான் குப்பன். இப்படத்தின் கதை ஆனது குப்பத்தின் மீனவ இளைஞனுக்கும், மார்வாடி பொண்ணுக்கும் இடையில் நடக்கும் காதல் கதைகளும், அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சுவாரஸ்யமாக படமாக எடுக்கப்பட்டு வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக இவருடைய இரண்டாவது மகன் தேவ் சரண்ராஜ் ஹீரோவாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அத்துடன் இன்னொரு கதாநாயகனாக ஆதி தேவ் மற்றும் கதாநாயகியாக சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி அருணாச்சலம் ஆகிய புது முகங்களையும் வைத்து எடுத்திருக்கிறார். மேலும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் கூடிய விரைவில் வெளிவரும். இதனைத் தொடர்ந்து இவருடைய நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது பல முன்னணி நடிகர்களுடன் நான் நடித்து விட்டேன் அந்த வகையில் விஜய்யுடன் மட்டுமே இன்னும் நான் நடிக்கவில்லை. அதுவும் கூடிய விரைவில் நடந்து விடும் என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Also read: ஆர்வக்கோளாறில் சன் பிக்சர்ஸ் செய்த மட்டமான வேலை.. எதிர்பார்ப்பை சுக்குநூறாக்கியதால் தலைவலியில் ரஜினி

Trending News