திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மணிகண்டனின் லவ்வர் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம் இதோ!

Manikandan Lover Movie Twitter Review : ஜெய் பீம், குட் நைட் போன்ற படங்களில் நடித்து பிரபலமான மணிகண்டனின் நடிப்பில் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லவ்வர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக கௌரி பிரியா நடித்திருக்கிறார்.

lover-review
lover-review

இந்நிலையில் லவ்வர் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். அதாவது ஆர்.ஜே பாலாஜி லவ்வர் படத்தை பார்த்து விட்டு தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இன்றைய காலத்தில் காதல் எப்படி கையாளப்படுகிறது என்பதை லவ்வர் படத்தில் பார்த்து முற்றிலும் நேசித்தேன்.

lover-movie-review
lover-movie-review

கிளைமாக்ஸ் காட்சிகள் அபாரமாக இருக்கிறது. மேலும் மணிகண்டன், கௌரி மற்றும் ஒட்டுமொத்த நடிகர்களின் நடிப்பு திறமை மற்றும் எழுத்து அற்புதம். குட் நைட் படத்தை தொடர்ந்து மணிகண்டனின் மற்றொரு தரமான படம். லவ்வர் பட குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

lover-review
lover-review

Also Read : இன்றைய காதலை எதார்த்தமாக கூறும் மணிகண்டன்.. லவ்வர் ப்ரிவ்யூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

லவ்வர் படம் பொதுவான மற்றும் சில மோசமான விஷயங்களை பிரதிபலிக்கும் உண்மை சம்பவங்களை கொண்டுள்ளது. மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா இருவரும் நிஜ வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்களை பிரதிபலிக்கும் விதமாக இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

lover-movie-review
lover-movie-review

மேலும் முதல் பாதியில் மது மற்றும் பொருட்கள் மீதான அதிகப்படியான நம்பிக்கை காட்டும் விதமாக இருப்பதால் படம் சற்று தொய்வு ஏற்படுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் நகைச்சுவையால் படத்திற்கு ஈடு கொடுத்துள்ளனர். மொத்தத்தில் லவ்வர் படம் அழுத்தமான காதல் நாடகப் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

lover-twitter-review
lover-twitter-review

Also Read : ரஜினிக்கு போட்டியாக வரும் மோட்டார் மோகனின் படம்.. மீடியா முன் மணிகண்டன் கூறிய பதில்

Trending News